மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) கத்தார் மண்டலம் சார்பாக இணைய காணொளி வாயிலாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மஜக இணைப் பொதுச் செயலாளர் J.S ரிபாயி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உரையில், நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து நபிகளாரின் வாழ்க்கை வரலாறுகளை மேற்கோள்காட்டியும், இதுவே இந்த ரமலான் நமக்கு கற்று தந்த பாடமாக இருக்கும் எனவும், அரவணைப்போடும், அனுசரனையோடும் உற்சாகமாக பணியாற்றிடுமாறு தனது உரையில் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கத்தார் மண்டல MKP யின் செயல்பாடுகள் குறித்து மண்டல துணைச்செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசீன் பேசினார். இந்நிகழ்வில், கத்தார் மண்டலச் செயலாளர் தைக்கால் சகாபுதீன், பொருளாளர் மஞ்சகொல்லை ஃபார்மானுல்லாஹ், துணைச்செயலாளர்கள் சிதம்பரம் நூர் முகம்மது, திருச்சி நசீர் பாஷா, பரங்கிப்பேட்டை ஃபாரூக் மற்றும் நிர்வாக குழு நிர்வாகிகளான முஹம்மது உவைஸ், அப்துல் ராஜ்ஜாக், அப்துல் ஃபத்தாஹ், சுபைர், இக்பால், முன்னாள் துஹைல் மாநகர பொருளாளர் அத்திக்கடை பாரூக் மற்றும் தாயக நிர்வாகிகளும், துபாய், குவைத் நிர்வாகிகளும், சகோதர அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர் திருப்பத்தூர் நிசார்
IKP – இஸ்லாமிய கலாச்சார பேரவை
இஸ்லாமிய கலாச்சார பேரவையின் தலைமையக அறிவிப்பு
இஸ்லாமிய கலாச்சார பேரவையின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக சகோ. M. S. ஜாகிர் ஹுசைன் மன்பயி த/பெ சர்புதீன் குட்ட பக்கீரி தைக்கால் வண்டிகேட் சிதம்பரம் 80562 51172 நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு கட்சியினரும் மனித நேய சொந்தங்களும் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம். இவண்; #எஸ்_எஸ்_நாசிர்_உமரி #பொருப்பாளர் #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டல நிர்வாகிகள் நியமனம்..!
இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் : இளையாங்குடி சீனி முகம்மது துணை செயலாளர் : அல்மன்சூர் மனிதநேய கலாச்சார பேரவை (MKP) மக்கள் தொடர்பு செயலாளர் : நீடூர் சர்புதீன் தொழிலாளர் அணி செயலாளர் MTS : கோணுலாம்பள்ளம் அன்சாரி இளைஞர் அணி செயலாளர் : சோழசக்கரை நல்லூர் முகம்மது யாசீன் மண்டல நிர்வாக குழு உறுப்பினர்கள் : - அதிரை பைசல் - நாச்சிக்குளம் அப்துர் ரஹ்மான் - அதிரை ராஜா முஹம்மது. ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர். 26.07.2018
உலமாக்கள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்! மஜக கோரிக்கை.!
உலமாக்கள் நல வாரிய உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்ட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தமிழக அரசை வலியுறுத்தியது. அதனையொட்டி, இன்று #அமைச்சர்கள் #நிலோபர்_கபில், #வளர்மதி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு அதில் இருந்த உலாமாக்களை அமைச்சர்களிடம் அழைத்து சென்ற மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் உலமாக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். உலமாக்கள் ஒய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்றும், அவர்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும், இது குறித்து முதல்வரை நேரில் சந்தித்து பேசுவதாகவும் கூறினார். அங்கு வந்த உலமாக்கள், தமிமுன் அன்சாரி MLA அவர் களுக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். தகவல்; #இஸ்லாமிய_கலாச்சாரப்_பேரவை (IKP)
சவுதி அரேபியா மதினாவில் மஜக நிர்வாகிகளுடன் IKP நிர்வாகிகள் மரியாதை நிமித்தமான சந்திப்பு..!
தம்மாம்.ஜூன்.21., தம்மாம் மண்டல #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை (IKP) மண்டல ஆலோசகர் செய்யது ஹமீது அவர்கள் நேற்று 21/06/2018 புதன்கிழமை உம்ரா என்னும் புனித பயணம் வந்திருக்கும் #மனிதநேய_ஜனநாயக_கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மொளலவி J.S.ரிபாய் ரஷாதி, மஜக கோவை மாவட்ட செயலாளர் Fish அப்பாஸ், மஜக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் இஷ்ஹாக் ஆகியோரை IKP தம்மாம் மண்டலம் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்கள்.தகவல்..#IKP_IT_WING#IKP_தம்மாம்_மண்டல_ஊடக_பிரிவு