நாகை. ஜூன்.25., நேற்று கேதாரிமங்களம் ஜமாத்திற்க்கு வருகைப்புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களை ஜமாத் நிர்வாகிகள் சந்தித்தனர்.
பிறகு புத்தாகரம் ஊராட்சிக்குட்ப்பட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. குறிப்பாக தண்ணீர் பிரச்சனை மின் விளக்கு, குப்பைதொட்டி, மையவாடி சுற்றுச்சுவர் போன்ற பிரச்சினைகளை கோரிக்கையை வைக்கப்பட்டது.
உடனடியாக சம்மதப்பட்ட அதிகாரிகளை தொடர்புக்கொண்டு பணிகள் நடைபெற பேசினார். உடன் அதிமுக திருமருகல் ஒன்றிய செயலாளர் ஆர்.இராதாகிருட்டிணன், மஜக மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் வடகரை பரக்கதலி, மாவட்ட துனை செயலாளர் யூசுப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி யூசுப்தீன், ஒன்றிய செயலாளர் எ.முஜிபுர்ரஹ்மான் மற்றும் குவைத் மண்டல துணை செயலாளர் முஹம்மது பாசில் ஆகியோர் உடன் இருந்தனர்
தகவல்:-
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
நாகை தெற்கு மாவட்டம்
#MJK_IT_WING
24.06.2017