சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ டீன் ஆகியோரைசந்தித்த மஜக மாநில துணைச் செயலாளர்..!


சிவகங்கை.ஏப்ரல்.10.,

சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், கொரோனா தொற்று இல்லை என்று ஆய்வு பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரும் கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் உள்ளனர்.

இவர்களை அரசு உடனே விடுவிக்க வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் அவர்களையும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அவர்களையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ் சந்தித்தார்.

இரண்டு அல்லது மூன்று தினங்களில் மூன்று குழுக்களாகப் பிரித்து அவர்களை விடுவிக்க இருக்கின்றோம் என்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் தெரிவித்தார்.

மாநில துணைச் செயலாளருடன் மஜக சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயினுலாபுதீன், இடைக்காட்டூர் சதாம் உசேன், இளையான்குடி நகர நிர்வாகிகள் சதாம் உசேன், கான்சா சிராஜூதீன், முஸ்தபா, முத்து முஹம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்
10-04-2020