(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் அறிக்கை) மதுரை அருகே அந்நஜாத் பத்திரிக்கையின் ஆசிரியர் அபு அப்துல்லாஹ் அவர்கள் நேற்று முற்பகல் நடைப்பெற்ற சாலை விபத்தில் இறந்திட்டார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. (இன்னாலில்லாஹி) 1980-களில் மத்தியில் தொடங்கிய ஏகத்துவ பரப்புரையில் தீவிரமாக இயங்க தொடங்கி, கடைசிவரை அந்த மாத இதழின் பெயரே ஒருக்கட்டத்தில் அதன் பிரச்சாக்காரர்களுக்கு புனைப்பெயரால் மாறியது. அறிவியல் ரீதியாக பிறைக் காலன்டரை முன்னிறுத்தும் பணியை மறைந்த சகோதரர் செங்கிஸ்கானுடன் இணைந்து முன்னெடுத்தார். கொள்கைப் பிரச்சாரராக மட்டுமின்றி, அவர் வணிகத்திலும் ஈடுபட்டு, யாருடைய தயவுமின்றி பணியாற்றினார். அதைத்தான் மிகவும் விரும்பினார். அவரோடு நாலைந்து சந்திப்பும் மட்டுமே எனக்கு ஏற்பட்டது. அவரது பல நிலைப்பாடுகளும் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அவர் ஒரு துணிச்சல் மிக்க ஊழியர் என்ற அடிப்படையில் அவர்மீது மரியாதை இருந்து வந்தது. அவரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் மனிதநேய ஜனநாயக கட்சியும் பங்கேற்கிறது. அவரது மறுமையில் வாழ்வு சிறப்புற இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். இவண், M. தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 13.7.17. (இன்று நடைபெறும் ஜனஷா தொழுகையில் மஜக இணைப் பொதுச்செயலாளர் மைதின் உலவி அவர்கள் பங்கேற்கிறார்).
தமிழகம்
தமிழகம்
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்…! மஜக கடும் கண்டனம்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை) காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். காஷ்மீரில் நடைபெறும் மண்ணுரிமைக்கான அரசியல் போராட்டம் இது போன்ற பயங்கரவாத செயல்களால் திசைமாற்றப்படுவது வேதனையளிக்கிறது. இதனை பெரும்பாலான காஷ்மீர் மக்கள் விரும்பாத போதும், பயங்கரவதிகளால் அவர்களின் பாரம்பரிய பெருமையும் , சமூக ஒற்றுமையும் சீர்குலைய அவர்கள் அனுமதிக்க கூடாது. அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில் அச்சம்பவத்தில் இதர பக்தர்களை தனது சாமர்த்தியமான திறமையால் பாதுகாத்த பேருந்து ஓட்டுநர் சலீம் அவர்களை மனதார பாராட்டுகிறோம். அவர் இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளங்களை பேணிப் பாதுகாத்திருக்கிறார். இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து தரப்பும் இணைந்து செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவண்; M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 12.07.2017
மஜக காஞ்சி வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்…! மாநில பொருளாளர் SS.ஹாருன் ரசீது பங்கேற்பு..!
சென்னை.ஜூலை.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று 11.07.17 மாலை 7மணி அளவில் குரோம்பேட்டையில் மாவட்ட செயலாளர் இல்லத்தில், மிக சிறப்பாக நடைபெற்றது. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜிந்தா மதார் தலைமையில், மாவட்ட பொருளாளர் முஹம்மது யாக்கூப், மாவட்ட துணை செயலாளர்கள் ஆலந்தூர்சலீம், தாம்பரம் ஜாஹிர், அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. காஞ்சி வடக்கு மாவட்டதிற்கு உட்பட்ட தாம்பரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபத்தூர், கண்டோன்ட்மென்ட், குன்றத்தூர், பகுதி, நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உள்பட 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள். சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com, மாநில செயலாளர் தைமியா அவர்களும், மாநில துனை செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில செயற்குழு உறுப்பினர் A.செய்யது அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இக்கூட்டதில் பேசிய மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கட்சியின் வளர்ச்சி, மற்றும் பணிகள் குறித்தும், மாநில செயலாளர் தைமியா அவர்கள் ஒழுக்கங்களை நாம் எப்படி பேன வேண்டும் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்தினார்கள். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING காஞ்சி வடக்கு. 11.07.2017
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்கு எதிரான அனைத்து கட்சி கண்டன ஆர்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!
வேலூர்.ஜூலை.11., இன்று வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரில் மத்திய அரசின் "ஜிஎஸ்டி" வரிக்கு எதிரான அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயளாலர் S.அனீஸ், அலியார், அத்தாவுல்லா - மாநில துணை செயளாலர், அ.இ.சி.பாதுகாப்பு இயக்கம், செளந்தரராஜன் திமுக, P.காத்தவராயன்- CPM, துரைசெல்வம்-CPI, குமரேசன்- விசிக, N.E.கிருஷ்ணன்- வணிகர் சங்க பேரவை, H.ரஹமத்துல்லா கான்.Ex.Mc-முஸ்லிம் லீக் ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்புரை தோழர்கள் J.M.வசீம் அக்ரம் - மஜக மாவட்ட செயளாலர், K.லிங்கமுத்து Ex.Mla-CPI, P.சக்திவேல், K.சாமிநாதன்-CPM மாவட்ட செயற்குழு, C.சந்திரன் - விசிக மாவட்ட செயலாளர், V.R.ரபீக் அஹமத்-முஸ்லிம் லீக், முல்லை சுந்தரேசன் - வணிகர் சங்க பேரவை மாநில து செயலாளர் ஆகியோரும்., மற்றும் SMD.நவாஸ் - மஜக மாவட்ட செயலாளர், K.ரவி - திமுக ஒன்றிய. செயலாளர், D.கிருஷ்ணமூர்த்தி-திமுக, P.குணசேகரன்-CPM, S.சம்பத் குமார் - CPM, C.சின்னதம்பி, C.சுப்பிரமணி, B.KS.ரபீக் கான் - மாவட்ட அமைப்பாளர் அ.இ.சி.பாது.இயக்கம், M.J.வாசுதேவன் - விசிக மாவ.செ.தொடர்பாளர், சசிராஜேந்திரன் - து.செ.வணிகர் சங்க பேரவை ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையை
பெங்களூரில் M.C.ராஜ் நினைவேந்தல்_நிகழ்ச்சி! M.தமிமுன் அன்சாரி, திருமாவளவன் பங்கேற்பு..!
பெங்களூர்.ஜூலை.11., விகிதாச்சார தேர்தல் முறையை வலியுறுத்தி 'CERI' என்ற தேர்தல் சீர்திருத்த அமைப்பை உருவாக்கிய M.C.ராஜ் அவர்கள் சமீபத்தில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி 10/07/2017 அன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், விசிக இணைப் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன், M.C.ராஜ் அவர்களின் மனைவியும், சமூக செயல்பாட்டாளருமான ஜோதி அம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். M.C.ராஜ் அவர்களின் பணிகளை கூறும் "His Smile had Millions of Meanings" என்ற நூலை M.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிட தோழர்கள் பெற்றுக் கொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி. #MJK_IT_WING 10.07.2017