You are here

மஜக காஞ்சி வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்…! மாநில பொருளாளர் SS.ஹாருன் ரசீது பங்கேற்பு..!

image

image

image

சென்னை.ஜூலை.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று 11.07.17 மாலை 7மணி அளவில் குரோம்பேட்டையில் மாவட்ட செயலாளர் இல்லத்தில், மிக சிறப்பாக நடைபெற்றது.

செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜிந்தா மதார் தலைமையில், மாவட்ட பொருளாளர் முஹம்மது யாக்கூப், மாவட்ட துணை செயலாளர்கள் ஆலந்தூர்சலீம், தாம்பரம் ஜாஹிர், அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

காஞ்சி வடக்கு மாவட்டதிற்கு உட்பட்ட தாம்பரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபத்தூர், கண்டோன்ட்மென்ட், குன்றத்தூர், பகுதி, நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள்,
உள்பட 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு நிகழ்வினை
சிறப்பித்தார்கள்.

சிறப்பு அழைப்பாளராக
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com,
மாநில செயலாளர் தைமியா அவர்களும், மாநில துனை செயலாளர் பல்லாவரம் ஷஃபி,
மாநில செயற்குழு உறுப்பினர் A.செய்யது அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டதில் பேசிய மாநில பொருளாளர்  எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள்  கட்சியின் வளர்ச்சி, மற்றும் பணிகள் குறித்தும், மாநில செயலாளர் தைமியா அவர்கள் ஒழுக்கங்களை நாம் எப்படி பேன வேண்டும் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்தினார்கள்.

தகவல்:

மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
காஞ்சி வடக்கு.
11.07.2017

Top