ஈழத் தமிழர்களை, அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முஸ்லிம்களை,
நேபாள கிறிஸ்தவர்களை இணைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, #விழுப்புரத்தில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களை இணைத்து ஜமாத்துல் உலமா ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசும் போது, ‘இந்த மூன்று கோரிக்கைகளை இச்சட்டத்தில் இணைக்காவிட்டால் மக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது’ என்றும், ‘இந்தியாவின் வீதிகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது’ என்றும் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூக மக்களும் பங்கேற்று ஆதரவளித்தனர்.
பொதுச் செயலாளருடன், மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் செளக்கத், மாவட்ட துணைச் செயலாளர் பைரோஸ், செய்யது உசேன், விழுப்புரம் நகர செயலாளர் ஜின்னா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#விழுப்புரம்_மாவட்டம்.