ஜாமியாமில்லியா மாணவர்கள் மீது டெல்லி போலீஸ் நடத்தியது அரசுவன்முறை, முதமிமுன் அன்சாரி MLA கடும் கண்டனம்

#மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரி_MLAகடும்_கண்டனம்..!

சென்னை.டிசம்பர்.16..,

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடைப்பெற்று வரும் நிலையில், நேற்று அமைதியாக போராடிய ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீஸ் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.

காவல்துறையே வாகனங்களை எரித்து, அந்த பழியை மாணவர்கள் மீது போட்டு, வன்முறையை திட்டமிட்டு உருவாக்கியிருப்பது பேரதிர்ச்சியை தருகிறது,

பல்கலைக்கழக துணை வேந்தரின் அனுமதியில்லாமலேயே. அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து போலீஸ் அராஜகங்களை அரங்கேற்றியிருக்கிறது.

விடுதிகளுக்குள் நுழைந்து மாணவர்களை சகட்டுமேனிக்கு அடித்து படுகாயப்படுத்தியதோடு, மாணவிகளின் விடுதிகளுக்குள்ளும் நுழைந்து தாக்கியிருக்கிறார்கள். மாணவிகளை மானபங்கம் செய்யவும் முயன்றதாக வரும் செய்திகள், நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா.? என்ற ஐயத்தை எழுப்புகிறது.

தங்களின் மனித உரிமை மீறல்கள் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, விளக்குகளை அணைத்து விட்டு தாக்குதலை நடத்தியிருப்பது டெல்லி போலீஸின் கொடூர முகத்தை காட்டுகிறது.

அத்துடன் முகத்தை மறைத்தப்படி, சமூக விரோதிகளும் போலீஸ் துணையோடு பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து வன்முறை நிகழ்த்தியிருப்பது, அதன் பின்னணிகளும் ஃபாசிச கும்பலின் சதித் திட்டங்களை வெளிக்காட்டுகிறது.

மேலும் இதை படம் பிடித்த, பத்திரிக்கையாளர்களையும் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.

மத யானை வெறிப்பிடித்து, நாசத்தை ஏற்படுத்தியது போல, டெல்லி போலீஸ் செயல்பட்டிருக்கிறது.

இவையாவும் ஆணவம் மிடித்த அரச வன்முறை என குற்றம் சாட்டுகிறோம். வன்மையாக கண்டிக்கிறோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2158247660941664&id=700424783390633

இச்சம்பவத்தை கண்டித்து நள்ளிரவில் டெல்லியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் டெல்லி போலீஸ் செயல்படுகிறது. எனவே இந்த அரச வன்முறைகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

டெல்லி போலீஸ் நடத்திய அராஜகங்கள் குறித்து உண்மைகளை அறியவும், நடவடிக்கைகளை எடுக்கவும் டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஒரு சுதந்திரமான விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இந்த அராஜகத்தை கண்டித்து நாடெங்கிலும் உள்ள மாணவர் அமைப்புகள் அறவழியில் போராட வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
16.12.2019