(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் அறிக்கை)
மதுரை அருகே அந்நஜாத் பத்திரிக்கையின் ஆசிரியர் அபு அப்துல்லாஹ் அவர்கள் நேற்று முற்பகல் நடைப்பெற்ற சாலை விபத்தில் இறந்திட்டார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. (இன்னாலில்லாஹி)
1980-களில் மத்தியில் தொடங்கிய ஏகத்துவ பரப்புரையில் தீவிரமாக இயங்க தொடங்கி, கடைசிவரை அந்த மாத இதழின் பெயரே ஒருக்கட்டத்தில் அதன் பிரச்சாக்காரர்களுக்கு புனைப்பெயரால் மாறியது.
அறிவியல் ரீதியாக பிறைக் காலன்டரை முன்னிறுத்தும் பணியை மறைந்த சகோதரர் செங்கிஸ்கானுடன் இணைந்து முன்னெடுத்தார்.
கொள்கைப் பிரச்சாரராக மட்டுமின்றி, அவர் வணிகத்திலும் ஈடுபட்டு, யாருடைய தயவுமின்றி பணியாற்றினார். அதைத்தான் மிகவும் விரும்பினார்.
அவரோடு நாலைந்து சந்திப்பும் மட்டுமே எனக்கு ஏற்பட்டது. அவரது பல நிலைப்பாடுகளும் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அவர் ஒரு துணிச்சல் மிக்க ஊழியர் என்ற அடிப்படையில் அவர்மீது மரியாதை இருந்து வந்தது.
அவரை இழந்து வாடும் அனைவரின் துயரத்திலும் மனிதநேய ஜனநாயக கட்சியும் பங்கேற்கிறது. அவரது மறுமையில் வாழ்வு சிறப்புற இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
13.7.17.
(இன்று நடைபெறும் ஜனஷா தொழுகையில் மஜக இணைப் பொதுச்செயலாளர் மைதின் உலவி அவர்கள் பங்கேற்கிறார்).