மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம்! சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA அதிரடி கோரிக்கை!

image

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம்!

நேரத்தை வீணாக்ககூடாது!

சட்டமன்றத்தை நீண்ட நேரம் நடத்த வேண்டும்!

சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA அதிரடி கோரிக்கை!

இன்று சட்டமன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசினார்.

பல உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேச விரும்புகின்றனர். எனவே 9 மணிக்கு சட்டமன்றத்தை தொடங்கி, மதியம் வரை நடத்த வேண்டும். பிறகு மாலையிலும் கூட்ட வேண்டும். பாராளுமன்றத்தைப் போல நடத்த வேண்டும் என்றார்.

அதுபோல உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய தேவையற்ற விஷயங்களை பேசாமல், உருப்படியாக மைய்யக் கருத்துக்களை பேசி நேரத்தை வீண்டிக்காமல் பயண்படுத்த வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்பதை நினைவூட்டுவிதமாக அதிரடியாக பேசியதும், அவையே மௌனமாக விட்டது.

மேலும் கூட்டத்தொடர் நடக்கும் போது, MLA-க்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க மாலை நேரங்களில் பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவைகளையும் நடத்த வேண்டும் என்றதும் உறுப்பினர்கள் மேஜையை தட்டினர்.

நல்ல திரைப்படங்களுக்கு, இயக்குனர்களுக்கு விருதுகளை வழங்க வேண்டும். அந்த வகையில் கவண், ஜோக்கர் படங்களுக்கும் விருதுகளை வழங்க வேண்டும் என்று கூறி திறமைமிக்க இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டார்.

NEET தேர்வுக்கு தற்காலிக மாற்று தீர்வு, ஹைட்ரோகார்பன்-மீத்தேன்  குறித்த எச்சரிக்கை, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், நெடுவாசல்-கதிராமங்கலத்தில் போராடும் மக்களை முதல்வர் சந்திக்க வேண்டும், கதிராமங்கலம் போராட்டவாதிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், உலகத் தமிழ் மாநாட்டை சென்னை அல்லது மதுரையில் நடத்த வேண்டும், உமறுப் புலவருக்கு அரசு விழா எடுக்க வேண்டும், நாகூரில் நாகூர் அனிபாவுக்கு நூலகத்துடன் கூடிய மணிமண்டபத்தை கட்ட வேண்டும், சாதிவாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும், தமிழகத்தில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும், முஸ்லிம், கிருஸ்துவ மாணவ, மாணவிகள் Phd (ஆராய்ச்சி படிப்பு) படிக்க முழு செலவையும் அரசு ஏற்க வேண்டும், ஜமாத்துகள் தரும் திருமண பதிவை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும், 3.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், உலமாக்கள் ஓய்வூதியத்தை முஜாவீர்கள், ஓதுவார்கள் ஆகியோருக்கும் வழங்க வேண்டும், கவிஞர் நா.காமராசரின் கவிதை நூல்களை அரசுடைமையாக்க வேண்டும், மணவை.முஸ்தபா பெயரில் சென்னையில் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி கூட்டத்தை உருவாக்க வேண்டும்,
‘செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை’ தொடர்ந்து தன்னாட்சி அமைப்பாக இயக்க வேண்டும், தர்ஹாக்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்களுக்கு சொந்தமான குளங்களை தூர்வார நிதியில் ஒதுக்க வேண்டும் என இதுவரை வேறு எவரும் வைக்காத புதிய கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினார்.
இம்முறையும் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

முன்னதாக முதல்வர் தலைமையில் ஆறு, ஏரி, குளங்கள் தூர் வாரும் பணிகளை பாராட்டி பேசியவர், நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து 5 ஆண்டு கால ஆட்சியை பூர்த்தி செய்ய வாழ்த்துவதாக கூறினார். உடனே ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டினர். அமைச்சர்கள் உடனே இதை இறைவனிடம் பிரார்த்தியுங்கள் என சிரித்தப்படி கூறினர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ” துவா செய்யுங்கள்” என்றார்.

நிறைவாக நேரம் இல்லாத்தால், தொகுதி கோரிக்கைகளை எழுத்து மூலமாக தருவதை ஏற்குமாறு கேட்டதும், பேரவை துணைத்தலைவர் அதை ஏற்றுக் கொண்டார்.

தகவல்;
சட்டமன்ற செய்தியாளர்கள் குழு,
#MJK_IT_WING
13.07.17.