சிவகங்கை.ஆக.15., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை நகரம் சார்பில் இந்தியாவின் 71வது சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஜகவினர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். இதில் நகர மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் திரலாக கலந்து கொன்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING சிவகங்கை நகரம். 15.08.17
தமிழகம்
தமிழகம்
மஜக சார்பில் இளையான்குடியில் 71-வது சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி…
சிவகங்கை.ஆக.15., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரின் கண்மாய்க்கரையில் இந்தியாவின் 71வது சுதந்திரதின கொடியேற்றும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமை ஒருங்கினைப்பாளர் மௌலா.முகம்மது நாசர் அவர்கள் இந்திய தேசிய மூவர்ன கொடியினை ஏற்றி சுதந்திரதின உரை நிகழ்த்தினார்கள். இந்தியாவில் தற்போது நடக்கும் மதவாத, ஜாதியவாத மோதல்களை கன்டித்ததோடு மக்களிடையே ஏற்ப்பட்டிருக்கும் விழிப்புனர்ச்சியை அரசுகள் புரிந்து கொள்ளவேண்டும் தற்போதய தேவை வல்லரசை விட நல்லரசே மக்களுக்கு நலன்பயக்கும் என்று உறையாற்றினார். சுதந்திரதின உரை முடிந்ததும் வாழ்த்து கோசங்கள் மூத்த நிர்வாகி காஜா முஹைதீன் அவர்கள் முழங்கினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மஜகவின் நகர் செயலாளர் உமர் கத்தாப், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துனைச்செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர் துனைச்செயலாளர்கள் செய்யது மஹபு, சிராஜ் அஹமது மற்றும் ஜகுபர் சாதிக், முத்து முஹம்மது, முஸ்தபா உள்பட இளையான்குடியைச் சேர்ந்த பொதுமக்கள் திரலாக நிகழ்ச்சியில் கலந்து கொன்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING இளையான்குடி நகரம் 15.08.17
71-வது இந்திய சுதந்திர தினவிழா! மஜக வாழ்த்து..!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) இந்திய துணைக்கண்டம் என புகழப்படும் இந்திய நாட்டின் 71 - வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சிராஜ் உத்தௌலா , ஜான்ஸிராணி லெட்சுமிபாய் , பகதூர்ஷா , பூலித்தேவன் , தீரன் சின்னமலை , தீரன் திப்புசுல்தான் , குயிலி , வீரன் அழகுமுத்துக்கோன் , கட்டபொம்மன் , காந்தியடிகள் , நேரு , நேதாஜி , அபுல்கலாம் ஆசாத் என பல்வேறு கட்டங்களில் பல்வேறு வடிவங்களில் நமது முன்னோர்கள் இந்திய விடுதலைக்காக போராடி தியாகங்களை புரிந்தனர். இன்று நமது சுதந்திரத்தை பாதுகாக்கும் பெரும் பணி நம் முன்னே காத்துக்கிடக்கிறது. மதவெறி, சாதிவெறி , பயங்கரவாதம் , ஊழல் , கனிமவள சுரண்டல் , விவசாய நிலங்களை இழத்தல் , நீராதாரங்கள் ஆக்கிரமிப்பு என பெரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. அந்த எண்ணங்களோடு , அமைதியான தாயகத்தை கட்டமைக்க அனைவரும் உறுதியேற்போம் எனக்கூறி , மீண்டும் எமது சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துக்
மஜக முயற்சியில் குடியாத்தம் MBS-நகர் பகுதியில் புதிய தண்ணீர் தொட்டி
வேலூர்.ஆக.14: வேலூர் (மே) மாவட்டம் குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் முயற்சியால் குடியாத்தம் நகராட்சி 8- வார்டு MBS நகரில் பழைய தண்ணீர் தொட்டி அகற்றி புதிய தண்ணீர் வைக்கப்பட்டது மற்றும் தேங்கி கிடக்கும் கழிவுநீர் தேக்கங்களில் டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் பரவாமல் தடுக்க எண்ணெய் பந்துகள் போடப்பட்டன. பின்பு MBS-நகர் 8- வது வார்டு சுற்றி உள்ள பகுதிகளில் கால்வாய்கள் அமைக்க சுற்றி உள்ள பகுதிகளில் இந்த சுகாதார பணியை நகராட்சி ஆணையர் #சங்கர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். களத்தில் மஜக நகர செயலாளர் S.அனீஸ், நகர பொருளாளர் முபாரக் அஹமத், நகர து.செயலாளர் சலீம், கிளை நிர்வாகிகள் அல்தாப், கபீர், அலீம் ஆகியோர் உடன் இருந்தனர். #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினருக்கும் மற்றும் நகராட்சி ஆணையருக்கும் மற்றும் நகராட்சி உதவி அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். தகவல்; #மஜக_தகவல்_தொழில் நுட்ப_அணி #MJK_IT_WING வேலூர் மே மாவட்டம், குடியாத்தம் நகரம் 14.08.2017
கதிராமங்கலம் காப்போம்! எழுச்சிமிகு அணிவகுப்புடன் கதிராமங்கலம் நுழைவு! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸுக்கு உணர்ச்சிகர வரவேற்பு!
குடந்தை.ஆக.14., தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ONGC நிறுவனத்தின் செயல்பாடுகளால் விவசாய நிலங்கள் பாழ்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரும் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மஜக சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டசபையில் குரல் கொடுத்தார். மேலும் அவருடன், தனியரசு MLA, கருணாஸ் MLA ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்ததோடு, இதுகுறித்து தமிழக முதல்வரிடமும் முறையிட்டனர். சட்டசபை வளாகத்தில் இதற்காக போராடி வரும் இயக்குநர். கெளதமனுடன் இணைந்து பேட்டியும் கொடுத்தனர். இச்சூழலில் பழ.நெடுமாறன், மணியரசன் மற்றும் இயக்குநர் கெளதமன் போன்ற தோழர்கள் கதிராமங்கலம் வருமாறு அழைப்பு விடுத்தனர். இன்று (14-08-2017) கும்பகோணத்திற்கு வருகை தந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் எழுச்சியான வாகன அணிவகுப்புடன் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கதிராமங்கலத்திற்கு அழைத்து வந்தனர். மஜக சார்பில் மோட்டார் பைக்குகள் மட்டுமின்றி 100 க்கும் மேற்பட்ட கார்களில் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி வந்தனர். அனைத்து வாகனங்களின் பின்பகுதிகளிலும் மஜக விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒட்டப்பட்ட "எங்கள் நிலத்தை திருடாதே" என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதுபோல் கார்களின் முன்புறத்தில் " கதிராமங்கலம் காப்போம்" என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.