
குடந்தை.ஆக.14., தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ONGC நிறுவனத்தின் செயல்பாடுகளால் விவசாய நிலங்கள் பாழ்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரும் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மஜக சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டசபையில் குரல் கொடுத்தார்.
மேலும் அவருடன், தனியரசு MLA, கருணாஸ் MLA ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்ததோடு, இதுகுறித்து தமிழக முதல்வரிடமும் முறையிட்டனர். சட்டசபை வளாகத்தில் இதற்காக போராடி வரும் இயக்குநர். கெளதமனுடன் இணைந்து பேட்டியும் கொடுத்தனர்.
இச்சூழலில் பழ.நெடுமாறன், மணியரசன் மற்றும் இயக்குநர் கெளதமன் போன்ற தோழர்கள் கதிராமங்கலம் வருமாறு அழைப்பு விடுத்தனர்.
இன்று (14-08-2017) கும்பகோணத்திற்கு வருகை தந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் எழுச்சியான வாகன அணிவகுப்புடன் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கதிராமங்கலத்திற்கு அழைத்து வந்தனர்.
மஜக சார்பில் மோட்டார் பைக்குகள் மட்டுமின்றி 100 க்கும் மேற்பட்ட கார்களில் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி வந்தனர்.
அனைத்து வாகனங்களின் பின்பகுதிகளிலும் மஜக விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒட்டப்பட்ட “எங்கள் நிலத்தை திருடாதே” என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதுபோல் கார்களின் முன்புறத்தில் ” கதிராமங்கலம் காப்போம்” என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மஜகவின் நெய்வேலி ஆம்புலன்ஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை வாகனங்களோடு இணைந்து வந்துகொண்டே இருந்தது.
வரும் வழியெங்கும் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். நிலைமை உணர்ச்சிகரமாக மாறியது.
போராளி. பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்து போட திருச்சிக்கு சென்றதால், தங்களின் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
“காப்போம், காப்போம்”
கதிராமங்கலம் காப்போம்
“மீட்போம் , மீட்போம்”
மண்ணின் வளத்தை மீட்போம்
என்ற முழக்கங்கள் அதிர்ந்தன. மக்களின் ஒன்றுபட்ட குரல்கள் எழுச்சியை மூட்டின.
“பிறந்த மண்ணை சூரையாடி….
வாழும் உயிர்களை அச்சுறுத்தி…
பேசாதே…பேசாதே…”
முன்னேற்றத்தை பேசாதே…
என்ற முழக்கங்கள் கதிராமங்கலத்தில் திரண்ட மக்களை உசுப்பியது.
பிறகு ஊர் மக்கள் தங்கள் கண்ணீரையும், தண்ணீரையும் காட்டினார்கள். ONGC நிறுவனத்தால் பாழ்பட்டுப் போன தங்கள் நிலத்தின் கதையை கதறலுடன் கூறினார்கள்.
பல தொலைக்காட்சிகள் நேரலையாக அனைத்தையும் ஒலிபரப்பி, இந்நிகழ்வுகளை தமிழர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றன.
மூன்று MLAக்களும் மக்களிடம் உரையாடினர். உங்களின் பக்கம் எப்போதும் நிற்போம் என்று உறுதி கூறி, ஆறுதல் கூறினர்.
பிறகு, மாதிரிமங்கலம் சென்று, நிலங்களையும், மக்களையும் மிரட்டிக் கொண்டிருக்கும் ONGC நிறுவனத்தின் உடைந்து வெடித்த குழாய்களையும், மண்ணையும் பார்வையிட்டனர். மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
“மத்திய அரசே…மத்திய அரசே…
வேளும், வாளும் தூக்கி சுமந்த
தமிழர் கூட்டத்தை சீண்டாதே….”
“மக்கள் விரும்பாத திட்டங்களை
தமிழக மண்ணில் திணிக்காதே….
தமிழர் கோபத்தை சீண்டாதே….”
என்ற முழக்கங்கள் அங்கு எழும்பிய வண்ணம் இருந்தது. மாநில அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது! மத்திய அரசுக்கு பணியக்கூடாது என்பதை இன்று நடைபெற்ற வாகன ஊர்வலம் உணர்த்தியது.
மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை , முக்குலத்தோர் புலிப்படை ஆகிய மூன்று கட்சிகளும் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை காக்கவும் , விவசாய நிலங்களை பாதுகாக்கவும் புறப்பட்டு இருக்கும் இந்த பயணம் தொடரும் !
அனைவரையும் தோழர் மணியரசன் அவர்களும் , தோழர் குடந்தை அரசன் அவர்களும் போராட்ட குழுவின் சார்பில் அனைவரையும் ஒழுங்கு படுத்தினர்.
உடன் மஜக மாநில செயலாளர் H. ராசுதீன், நாச்சிக்குளம் தாஜுதீன், விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ் ஆகியோர் இருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தஞ்சை வடக்கு மாவட்டம்
14.08.17