You are here

குழந்தைகள் மரணம்! இது நாட்டுக்கே அவமானம்..!

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

உத்திரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவமனைக் கல்லூரியின் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் தொடர்ச்சியாக 72 குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் கதறல் அனைவரையும் உலுக்குகிறது.

இதில் நீண்ட காலம் குழந்தைகளே இல்லாமல் தவமிருந்து பெற்ற குழந்தைகள் , நீண்ட இடைவெளைக்குப் பிறகு பெற்றக் குழந்தைகள் என அனைவரும் அடக்கம் என்பதை எண்ணும்போது அந்த பெற்றோர்களின் துயரம் நமது கண்களையும் குளமாக்குகிறது.

எதிர்காலத்தில் ஆற்றல் மிக்க பல்துறை வல்லுனர்களாகவோ, அல்லது வாழ்வின் ஏதோ ஒரு முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் நட்சத்திரங்களாகவோ வரவேண்டும் அந்த மழலைகளை நமது நாடு பறிகொடுத்திருக்கிறது.

இந்த நாட்டை வல்லரசாக்க வேண்டும் என துடிக்கும் ஆட்சியாளர்கள் முதலில் உயர் தரமிக்க மருத்துவமனைகளையும், அறிவுசார் கல்வி நிலையங்களையும் உருவாக்க வேண்டும் என்பதைத்தான் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

மாட்டை பாதுகாப்போம் என போலி வகுப்புவாத அரசியல் நடத்தும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் அம்மாநில மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

உயரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எவ்வளவு ஆறுதல் கூறினாலும் , அவர்களின் துயரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் அகற்ற முடியாது காலம்தான் அவர்களை ஆறுதல் படுத்த வேண்டும்.

அவர்களின் கண்ணீரிலும் , கவலையிலும் நாமும் பங்கேற்போம்!

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
13.08.2017

Top