மஜக பொதுச்செயலாளருடன் இயக்குநர் தங்கர்பச்சன் சந்திப்பு!

image

image

image

வேதாரண்யம்.ஆக.13., இன்று தோப்புத்துறையில் மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களை அவரது இல்லத்தில்  இயக்குநர் தங்கர்பச்சன் சந்தித்தார்.

தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்காகவும் , தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும் தொடர்ந்து சட்டசபையில் பேசிவருவது தொடர்பாக தனது பாராட்டுக்களை கூறியவர் , சட்டசபையில் நான் பார்க்கும் ஒரே உணர்வுள்ள தமிழர் நீங்கள் தான் என்றும் கூறி வாழ்த்தினார்.

தொடர்ந்து சமரசமின்றி இயங்குமாறும், தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களை கூர்ந்து கவனித்து வருவதாகவும் கூறினார்.

அரை மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பின்போது மஜக துணை பொதுச் செயலாளர் மதுக்கூர்.ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜுதீன், மாநில துணைச்செயலாளர் சேக் அப்துல்லா, நாகை தெற்கு மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், வேதை நகர செயலாளர் சேக் அகமதுல்லாஹ், துபாய் மண்டல நிர்வாகி அப்துல் ரெஜாக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
வேதை நகரம் (நாகை தெற்கு மாவட்டம்)
13_08_17