(தொகுப்பு 1)
நாகை தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியத்தில் சிக்கல் ஊராட்சியில் மழைவெள்ள பாதிப்புகளை எம்.தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆய்வு செய்தார்.
சிக்கல் ஊராட்சியில் உள்ள தட்டான்குளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வார மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பிறகு அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியை ஆய்வுசெய்து ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பிறகு சிக்கல் சிங்காரவேலர் கோவில் அருகே இருந்த மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். அங்கே ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பங்கள், மின் இணைப்பு பெட்டிகளை சரிசெய்ய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதனை தொடந்து குற்றம் பொறுத்தானிருப்பு கிராமத்தில் தலித் மக்கள் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதியில் இடிந்து விழுந்துள்ள அரசு கட்டி கொடுத்த 35 வீடுகளை பழுதடைந்த நிலையில் இருப்பதால் அவற்றை சீல் வைத்து மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு அக்கிராமத்தில் உள்ள பகுதி நேர அங்காடியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். சமையல் எண்ணெய் விநியோகத்தை அனைவருக்கும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பிறகு வடகுடி ஊராட்சிக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவ்வூரில் புதிதாக இரண்டு சாலைகள் போடுவதற்கு ஒப்புதல் அளித்தார். மேலும் கடந்த மூன்று நாட்களாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம் அமைத்து உணவு உள்ளிட்ட வசதிகளை சிறப்பாக செய்தமைக்காக BDO உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இச்சுற்றுபயணத்தில் முபாரக், ரியாஸ், ஜாஹிர், குணசேகர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளீட்டோர் உடன் சென்றனர்.
காலை 9 மணி முதல் நண்பகல் 12 வரை இந்த ஆய்வுகள் நடைபெற்றது.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
08.11.17