நவம்பர் 8 கருப்பு நாள்..! எதிர்கட்சிகள் போராட்டத்திற்கு மஜக ஆதரவு…!

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, வெளியிடும் அறிக்கை)

கடந்த ஆண்டு நவம்பர் 8 அன்று மத்திய பாஜக அரசு 500, 1000, ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்தது. இதன் மூலம் பொருளாதாரப்புரட்சி ஏற்படும் என்றும், கருப்பு பணம் ஒழியும் என்றும் ,புதிய இந்தியா பிறக்கிறது என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கமளித்தார்.

ஆனால், கடந்த ஓராண்டில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு , நாட்டின் பொருளாதாரம் சீரழிந்திருக்கிறது.நாடெங்கும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார அனுகுமுறைகளை தோலுரிக்கும் வகையில் நாடுதழுவிய அளவில்  எதிர்கட்சிகள் நவம்பர் 8 அன்று கருப்பு தினம் கடைபிடிக்க இருப்பது வரவேற்க்கதக்கது.

எதிர் கட்சிகளின் இப்போராட்டத்திற்கு மஜக வின் சார்பில் எமது தார்மீக ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவன்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.