தமிழக அரசியல் களத்தில் முதல்முறையாக…… நாகையில் மஜக சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி முகாம்!

image

image

image

image

image

நாகை.நவ.08., புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது மக்களுக்கு மத்தியில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுப்பது தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் நாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது.

இதில் நாகை (தெற்கு) நாகை (வடக்கு)திருவாரூர், தஞ்சை (வடக்கு)  கடலூர்(வடக்கு) விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பேரிடர் மீட்புக் குழுவில் தேர்வு செய்யப்பட்ட முக்கிய செயல்வீரர்கள் 125 பேர் பங்கு கொண்டனர்.

Save the children_Nokia மற்றும் அவ்வை கிராம அமைப்பு ஆகிய தொண்டு நிறுவனங்கள் இப்பயிற்சியை வழங்கினர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்பது, காயமடைந்தவர்களை மீட்பது, இறந்தவர்களை கண்டெடுப்பது, ஆபத்தான மீட்பு பணிகளை கவனமாக கையாள்வது என செயல்முறை பயிற்சிகள் நடத்தப்பட்டன.

இம்முகாமை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டு பயிற்சி  நிறைவு சான்றிதழ்களில் கையெழுத்திட்டார்.

தமிழக அளவில் அரசியல் மற்றும் மக்கள் இயக்கங்களில் மஜக தான் இத்தகைய பயிற்சி முகாமை முதல் முறையாக டெல்டா மாவட்டங்களை தேர்ந்தெடுத்து நடத்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வை மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் தலைமையில் மாநிலத் துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், மாநில விவசாயிகள் அணிச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் மாவட்ட வாரியாக ஒருங்கிணைத்தனர்.

நாகை(தெற்கு) மாவட்ட செயலாளர் ரியாசுதீன், மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா ஆகியோர் திறம்பட வழி நடத்தினர்.

சிறப்பாக இம்முகாமை நடத்திட மாவட்ட பொருளாளர் வடகரை பரக்கத் அலி 3 நாட்களாக, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சங்கர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மஜக பொதுச்செயலாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
08_11_17