பிப்ரவரி.11.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் வடமேற்கு மண்டல ஆலோசனை கூட்டம் ஓசூரில் மாநில துணைச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான ஒசூர் நவ்சாத் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நிர்வாக சீரமைப்புகள், புதிய கிளைகள் அமைப்பு, உறுப்பினர் சேர்ப்பு, கட்சியில் சேரும் புதியவர்களுக்கான வாய்ப்பு ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் பேசிய தலைவர் அவர்கள், அசாத்தியங்களை சாத்தியப் படுத்துவதே மஜக-வின் சாதனைகளாக உள்ளது என்றார்.
முன்பை விட இப்போது மஜக பணிகளால் ஈர்க்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மஜக மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என்பதையும் எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன், பெங்களூர் மண்டல நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முகமது உமர், மாவட்ட பொருளாளர் சையத் நவாஸ், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் ஜஹிருஸ் ஜமா, மாவட்டத் துணைச் செயலாளர் முன்னா, வேலூர் மாவட்ட செயலாளர் கஸ்பாஸ் ஏஜாஸ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வடமேற்கு_மண்டலம்
10.02.2024.