ஒசூர்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வருகை! மஜக வினர் உற்சாக வரவேற்பு

பிப்ரவரி.10.,

இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார்.

அவருக்கு மாவட்ட செயலாளர் முகம்மது உமர் தலைமையில் நகர மஜக-வினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

பிறகு மஜக கொடிகளுடன் வாகன அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

பத்தலபள்ளி கிளையில் மஜக கொடியையும் எழுச்சி முழக்கங்களுடன் ஏற்றி வைத்தார்.

இதில் மேலிட பொறுப்பாளரும், மஜக மாநில துணைச் செயலாளருமான ஓசூர் நவ்ஷாத், மாநில துணைச் செயலாளர் துரை முகம்மது, மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சர்தார், கலீல் பாஷா, அய்யூப், ஜலால் மற்றும் ஆரிப் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நகர மஜக நிர்வாகிகள் சிறப்பான ஒருங்கிணைப்பை செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கிருஷ்ணகிரி_மாவட்டம்
10.02.2024.