ஒசூர் பத்திரிக்கையாளர் சந்திப்பு… ராபாட் பயாஸ் உள்ளிட்டோரை அவரவர் விரும்பும் நாட்டுக்கு ஏன் அனுப்ப கூடாது? நாடாளுமன்ற தேர்தலில் மஜக நிலைபாடு என்ன? மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி

பிப்ரவரி.11.,

இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வருகை தந்தார்.

அப்போது அவருக்கு மஜக-வினர் சிறப்பான வாகன அணிவகுப்பு மரியாதையை அளித்தனர்.

கொடியேற்றல், மாவட்ட அலுவலகம் திறப்பு, மண்டல ஆலோசனை கூட்டம் ஆகியவற்றுக்கு பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது…

பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையில் எங்களது பங்களிப்புகள் அளப்பறியது.

தற்போது விடுதலை ஆகியுள்ளவர்களில் ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன் ஆகியோர் திருச்சி அகதிகள் முகாமில் உள்ளனர்.

உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பிறகு, அகதி முகாமில் ஏன் இருக்க வேண்டும்?

சமீபத்தில் ராபர்ட் பயாஸ் 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

அவர்களது கோரிக்கையை ஏற்று அவரவர் விரும்பும் நாட்டுக்கு அவர்களை அனுப்பிட வேண்டும்.

ஜெயக்குமார் குடும்பம் சென்னையில் உள்ளது. அவரை அவரது குடும்பத்துடன் வாழ அனுப்பிட வேண்டும்.

இதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் உதவ வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

பிறகு, உத்தரகாண்ட் மாநிலத்தில் மசூதி இடிப்பை கண்டித்து நடந்த போராட்டங்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் 8 பேரை கொன்ற ஆளும் பாஜக அரசின் படுகொலைகளை கண்டித்தார்.

பிறகு செய்தியாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் மஜக-வின் நிலைபாடு குறித்து கேள்வி எழுப்பினர்.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கட்டும். அப்போது எங்கள் நிலைபாட்டையும் அறிவிப்போம் என்றார்.

இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர்கள் ஓசூர் நவ்சாத், புதுக்கோட்டை துரை முகம்மது, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ரமேஷ் தேவர், மாவட்ட செயலாளர் முகம்மது உமர், பொருளாளர் நவாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஓசூர் அமீன், பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சர்தார், கலீல் பாஷா, ஜலால் மற்றும் ஆரிப் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்ட செயலாளர் ஏஜாஸ், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜமா , திருப்பூர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா, பெங்களூர் மண்டல செயலாளர் பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கிருஷ்ணகிரி_மேற்கு_மாவட்டம்
10.02.2024.