சென்னையில் CAA நகல் எரிப்பு… மஜக போராட்டத்தில் மக்கள் ஆவேசம்

பிப்ரவரி.10.,

காசியில் உள்ள புராதான ஞானவாபி பள்ளி வாசலை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் சங்பரிவார அமைப்புகள் தொடர் முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வாரணாசி நீதிமன்றம் கடந்த வாரம் அளித்த தீர்ப்பில், அப்பள்ளியின் தென்புறத்தில் பூஜை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.

இத் தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகி வருகிறது.

இத்தீர்ப்பை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டங்கள் நடத்துமாறு தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மஜக-வினரை கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில் இன்று மஜக வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக திருவெற்றியூர் தாங்கல் பகுதியில் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் L.முகம்மது ஜாஃபர் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தை மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபீ கண்டன முழக்கமிட்டு துவக்கி வைத்தார்.

மாநில துணை செயலாளர்கள் அஸாருதீன், பேரா. S.M.A. சலாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாநில துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான S.M. நாசர் அவர்களின் ஒருங்கிணைப்பில் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

கடந்த வாரம் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய சென்னை மாவட்டம் சார்பாக ஒரு முற்றுகை போராட்டம் தடையை மீறி நடைபெற்றது. தற்போது 48 மணி நேர அறிவிப்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த கோரிக்கைக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போதே CAA தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிவிப்புகள் வந்த நிலையில் போராட்ட முழக்கங்களுக்கிடையே CAA சட்ட நகலையும் தீயிட்டு கொளுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

அப்போது இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் பைசல், மாணவர் இந்தியா தலைவர் பஷீர், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் அமீன், பொருளாளர் ஸ்வாதீஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கதிர் உசேன், அபுதாஹிர், மாவட்ட பொருளாளர் நிஜாம் பாய், உள்ளிட்ட திரளான மஜக-வினர் பங்கேற்றனர்.

மாவட்டத் துணைச் செயலாளர் எம்.எஸ். காசிம் ஷெரிப் நன்றியுரையாற்றினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வடசென்னை_கிழக்கு_மாவட்டம்
10.02.2024.