சிறைவாசிகள் விடுதலை நிகழ்வு! அனைவருக்கும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம்! திருச்சியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு

பிப்ரவரி.09.,

மனிதநேய ஜனநாயக கட்சியின், திருச்சி மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது.

இதில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

அவருடன் மஜக மாநிலச் செயலாளரும், மேலிட பொருளாளருமான அகமது கபீர், மாநில துணைச் செயலாளர் புதுக்கோட்டை துரை முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிப் 10 சிறை முற்றுகை போராட்ட பணிகளுக்கு சிறப்பாக ஆயத்தப் பணிகளை மிக சிறப்பாக முன்னெடுத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு தலைவர் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

இந்த போராட்டம் நாளை திட்டமிட்டப்படி நடந்திருந்தால், தமிழகம் தழுவிய பிரம்மாண்ட ஆர்ப்பாட்ட களமாக அது மாறியிருதிருக்கும் என்றும், சிறைவாசிகளின் விடுதலைக்காக நடைபெற்ற ஆகப் பெரிய எழுச்சியாகவும் அது அமைந்திருக்கும் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.

மஜக-வின் திட்டமிட்ட போராட்ட நகர்வுகள்தான் சிறைவாசிகளின் விடுதலை முயற்சிகளில் புதுப்புது தீர்வுகளை பெற்றுக் கொடுத்தது என்பதை மக்கள் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக இதை சட்டசபையில் விவாதமாக்கி , அதை மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒன்றாக மாற்றிய மஜக-வின் ராஜதந்திர நடவடிக்கை ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது ஒரு வரலாற்று பதிவு என்றார்.

இந்த விடுதலை களத்தில் போராடிய அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும், தலைவர்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு என்றவர், தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின், தமிழக ஆளுனர் திரு. R.M. ரவி, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை இதற்காக கொண்டு வந்த எதிர்கட்சி தலைவர் திரு. எடப்பாடி. பழனிச்சாமி, அதை ஆதரித்து பேசிய அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள், ஆதரவளித்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் அவைத் தலைவர் சேக் தாவூத், மாவட்டப் பொருளாளர் செய்யது முஸ்தபா, துணைச்செயலாளர்கள் ஷேக் அப்துல்லாஹ், K. அன்வர் பாஷா, சேக் மைதீன் மற்றும் நிர்வாகிகள் ஜமால்தீன், ஜாகிர், செய்யது முகம்மது, கமால் பாஷா உள்ளிட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்
09.02.2024