மஜகவுக்கு இது பருவ மழைக்காலம்! தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்து மு தமிமுன் அன்சாரி MLA உரை!


அக்.17,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அக்டோபர் 17 முதல் டிசம்பர் 31 வரை, 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அளவிலான இம்முகாமை இன்று தஞ்சை மாவட்டம் பண்டாரவடையில், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்.

அதை முன்னிட்டு பண்டாரவடை எங்கும் மஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

மாலை 4 மணி முதல் மழை கொட்டியதால் நிகழ்ச்சியை தொடங்க தாமதமானது.

பிறகு மழை தணிந்ததும் நிகழ்ச்சி தொடங்கியது. அந்த நிலையிலும் திரளானோர் அங்கு கூடினர்.

உறுப்பினர் சேர்ப்பு தொடக்க விழா அறிமுக பதாகையை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட, மாநில செயலாளர் ராசுதீன் அதை பெற்றுக் கொண்டார்.

அப்போது மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா கட்சியின் முழக்கங்களை எழுப்ப அதை அனைவரும் எதிரொலித்தனர்.

பிறகு வரிசையில் வந்து பலரும் படிவத்தில் கையெழுத்திட்டு, பொதுச் செயலாளரிடம் அடையாள அட்டையை பெற்று சென்றனர்.

இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

இவ்வாண்டு குறித்த நேரத்தில் இன்று வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது.

மஜகவுக்கும் இது பருவ மழைக்காலம் தான். ஆம். உறுப்பினர்கள் மழைத்துளிகளாய் சேரும் காலம் இது.

கொரோனா நெருக்கடிகளை மீறி, கடந்த 7 மாதங்களில் 7 வகையான மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து வீரியமிக்க போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம்.

எமது முற்போக்கான அரசியலை மக்கள் பாராட்டுகிறார்கள். அதனால் கட்சியில் இளைஞர்களும், மாணவர்களும் எழுச்சியோடு இணைகிறார்கள்.

ஒரு ஊரில் மஜகவின் கொடிக்கம்பம் நடப்படுகிறது எனில் அங்கு அமைதியும், இணக்கமும், சமாதானமும் வலுப்படுகிறது என அர்த்தமாகும்.

எங்கள் கட்சிக்கும் இந்த தஞ்சை மாவட்டத்திற்கும் நிறைய நெருக்கம் உள்ளது. கும்பகோணத்தில் தான் கட்சியை தொடங்கினோம். அன்று இரவே அய்யம்பேட்டையில் அறிமுக பொதுக் கூட்டத்தை நடத்தினோம். பண்டார வடை எங்கள் கோட்டை ஆகும். ( ஊராட்சி மன்ற தேர்தலில் இங்கு மஜக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.)

இங்கு மழை பெய்ததால் நிகழ்ச்சி நடக்குமா? என்ற நிலை இருந்தது. அதையும் மீறி நிகழ்ச்சி நடக்கிறது.

நீங்கள் எல்லோரும் மஜகவில் இணைந்து, எமது முற்போக்கான, நல்லிணக்க மிக்க அரசியலை வலுப்படுத்த வேண்டும்.

இன்று தொடங்கப்படும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் டிசம்பர் 31 வரை 75 நாட்கள் தமிழகம் எங்கும் நடைபெறும்.

முதல் கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து இதற்காக பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு புதியதாக சேர்ந்த உறுப்பினர்கள் பொதுச் செயலாளருடன் படம் எடுத்துக் கொண்டனர்.

புகைப்படத்துடன் கூடிய படிவங்கள் தலைமையகத்திற்கு வந்த நாளிலிருந்து, அடுத்த 15 நாட்களுக்குள் உறுப்பினர் அட்டைகள் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக தஞ்சை – குடந்தை பிரதான சாலையில் கட்சி கொடியை பொதுச் செயலாளர் ஏற்றி வைத்தார்.

நிகழ்வில் அனைவருக்கும் முக கவசங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா நோயை கட்டுப்படுத்து கபசுர குடிநீரும் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது.

இது ஒரே நாளில் திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு அங்குள்ள பெரிய பள்ளிக்கு தொழுகைக்கு சென்ற பொதுச் செயலாளர் அவர்கள், அங்கு சமூக இடைவெளி பின்பற்றப்படுதலை பார்த்து பள்ளியின் ஐமாத் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

தொடர்ந்து பசுபதிகோயிலில் புதிதாக தொடங்கப்பட்ட மஜக கிளையின் நிர்வாகிகள் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நிகழ்வுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஷேக் முஹம்மது அப்துல்லாஹ் தலைமை வகித்தார்.

மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாநில செயலாளர் அய்யம்பேட்டை யூசுப் ராஜா, மாநில மருத்துவ சேவை அணி துணைச் செயலாளர் மஹ்ரூப், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் அகமது கபீர், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சங்கை. தாஜ்தீன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

அமீரக செயற்குழு உறுப்பினர் யூசுப் ஷா, மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், மாவட்ட துணைச் செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, குடந்தை ஆசாத், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் முஹம்மது இஸ்மாயில், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா, திருவையாறு ஒன்றிய செயலாளர் ஹபீப் முஹம்மது உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது அலி நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.