சென்னை.ஆகஸ்ட்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்ட அமைந்தகரையில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜக-வில் இணைத்துக்கொண்டனர். மஜக மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிதாக கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் அஹமத் சமீம் அவர்கள் வழங்கி, கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்தியசென்னை_மேற்கு 01.08.2021
உறுப்பினர் சேர்க்கை
வேலூரில் பேரெழுச்சி!! மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!
வேலூர்.மார்ச்.08, மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்டம் காட்பாடி வடுகங்குட்டை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்டோர் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட துணைச் செயலாளர் சையத் உசேன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமீன், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில், மற்றும் ஹாஜிபூரா அயாத், வடுகங்குட்டை சேட்டு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 08-03-2021
சேலத்தில் தொடரும் எழுச்சி! மஜகவில் திரளானோர் இணைந்தனர்!
சேலம்:பிப்.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரளானோர் மஜக வில் இணைந்து வருகின்றனர். அதை தொடர்ந்து சேலத்தில் மாவட்ட செயலாளர் M.A. மகபூப் அலி, அவர்கள் முன்னிலையில் திரளானோர் கட்சியில் இணைந்தனர். அவர்கள் அனைவரும் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜக வில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர், மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் மாவட்ட பொருளாளர் O.S. பாபு மாவட்ட துணைச் செயலாளர் சர்புதீன், முகம்மது சுகைல், முகமது ஷபீர், மருத்துவ சேவை அணி செயலாளர் ஹஸுன், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் தஸ்தகீர், விவசாய அணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர் , மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சேலம்_மாவட்டம் 21.02.2021
மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது முன்னிலையில் மஜகவில் இணைந்த மாற்றுகட்சியினர்..!
சென்னை.பிப்.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாற்றுக் கட்சியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்களை இணைத்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த தாம்பரம் ஷாஜஹான், முஸ்தபா மற்றும் சேக்தாவூத் ஆகியோர் தலைமையில் பலர் இன்று மஜக தலைமையகத்தில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். மேலும் புதிதாக இணைந்தவர்கள் மத்தியில் பேசிய பொருளாளர் அவர்கள், கட்சி பணிகளில் தீவிரமாக களப்பணியாற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நிகழ்வின் போது பொருளாளர் உடன் மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜிந்தா மதார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இந்நிகழ்வில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் அல்தாப், பொருளாளர் ஆலந்தூர் சலீம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், ECR சமது உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கை_வடக்கு_மாவட்டம் 14-02-2021
துளசியாப்பட்டினத்தில் மஜகவில் இணைந்த புதியவர்கள்!
பிப்.08, நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் துளசியாப்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியில் திரளானோர் தங்களை இணைத்து கொண்டனர். மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாவட்ட துணைச் செயலாளர் M.A.அப்துல் சலீம் மற்றும் வேதை ஒன்றிய செயலாளர் J.இப்ராகிம்ஷா ஆகியோர் இணைந்தவர்களுக்கு முதற்கட்ட மஜக அடையாள அட்டைகளை கையளித்தனர். இதில் துளசியாப்பட்டினம் கிளை செயலாளர் K.அப்துல் சுக்கூர், பொருளாளர் M.அப்துல் ஹலீம், இளைஞரணி செயலாளர் J.இம்ரான் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம். 07.02.2021