நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் சார்பில், #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், இன்று நாகப்பட்டினம் EGS பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கத்தில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
“இதயங்களால் ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு மதத்தினரும், பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் பங்குபெற்று “நாகை தொகுதி” யின் பண்பாட்டை வெளிக்காட்டினர்.
மாலை 4 மணியிலிருந்தே தொகுதியை சேர்ந்த பல்வேறு சமூக இளைஞர்கள் தன்னார்வத்துடன் வருகை தந்து, நாற்காலிகளை ஒழுங்குபடுத்தி விருந்தோம்பலுக்கான பணிகளை முன்னின்று செய்தனர்.
அரங்கத்தின் நுழைவாயிலில் “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர் திறந்த தியாகிகளின் குடும்பத்தினர் ஆறுதல் பெற பிராத்தியுங்கள் “என்ற பதாகை அனைவரின் கவனத்தையும் பிரதானமாக ஈர்த்தது.
அதுபோல் வளாகத்தில் நாகை MLA அலுவலகத்தின் சார்பில் “நகர்வு அலுவலகம்” அமைக்கப்பட்டு, அதில் அலுவலக ஊழியர் சம்பத் தலைமையில் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
அதுபோல் ஏராளமானோர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான பரிந்துரை கடிதங்களை பெற்று சென்றார். பலர் கொடுத்த மனுக்கல் மாவட்ட ஆட்சியரிடமும், அமைச்சரிடமும் உடனுக்குடன் கையளிக்கப்பட்டது.
மாலை 6 மணிக்கெல்லாம் மக்கள் வரத் தொடங்கினர். பெண்களும் வந்ததால், அவர்களுக்கு தனிப்பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டது. வாசலில் நின்று MLA அவர்கள் தொகுதி மக்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சகோ.பரக்கத் அலி அவர்கள் அரங்கில் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு பலியான தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் எல்லோரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மெளனம் கடைப்பிடிக்குமாறு மு.தமிமுன் அன்சாரி MLA கேட்டுக் கொண்டார். அனைவரும் அவ்வாரே மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பிரபல பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் “வாழ்நாள் எல்லாம் போதாது… வள்ளல் நபிகளின் புகழ் பாட…” என்ற பாடலை கனீர் குரலில் பாடி அனைவரையும் பரவசப்படுத்தினார்.
பிறகு மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இஃப்தார் நிகாழ்ச்சியில் தொகுதி மக்கள் மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் பங்கேற்றதை சுட்டிக்காட்டி, அரசியல், கட்சி பேதங்களை தாண்டி இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுவதாக கூறினார். இதில் அனைத்துக் கட்சிகளை சேர்ந்தவர்களும், பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும், ஜமாஅத்தார்களும் வந்திருப்பதற்கு நன்றி கூறினார்.
அமமுக வின் மாவட்ட செயலாளர் R.சந்திர மோகன், முன்னால் சேர்மேன் R.மஞ்சுலா ஆகியோர் வந்தப்போது., MLA அவர்கள், வரவேற்று சிறப்பு விருந்தினர் வரிசையில் அவர்களை அமர வைத்தார். தனது வெற்றிக்கு உழைத்தவர்களில் முக்கியமானவர்கள் என AS அலாவுதீன் அவர்களிடம் கூறினார்.
பிறகு பாதரியார் ரமேஷ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதை தொடர்ந்து அமைச்சர் O.S மணியன் அவர்கள், தனக்கும் தமிமுன் அன்சாரி அவர்களுக்கும் உள்ள நட்பு குறித்தும் முன்னாள் முதல்வர் ஜெயலிதா அம்மா அவர்கள் அவர் மீது வைத்திருந்த அன்பு குறித்தும் தோழமையுடன் பேசினார். மேலும் இஃப்தார் நிகழ்ச்சி குறித்தும் சிறப்பாக பேசினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அவர்கள் தனது பகுதியில் மக்கள் இப்படி ஒற்றுமையாக இருப்பதை புன்னகை தழுவ பார்த்துக் கொண்டிருந்தார். மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரம்யின்மையால் பேசுவதை தவிர்த்து விட்டார்,
சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
எல்லா மதத்தினர்களும் வருகை தந்ததால் “நோன்பு கஞ்சி” டெல்டா மாவட்ட கலாச்சாரப்படி சைவமாகவே அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பழங்கள், வடைகள், பேரித்தம் பழங்களோடு பிரியாணி வழங்கப்பட்டது. சைவப் பிரியர்களுக்கு ‘ வெஜிடபுல் பிரியாணி’ வழங்கப்பட்டது.
எல்லோரின் உணர்வுகளையும் மதித்து இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக, சிறப்பு விருந்தினராக வந்த அனைவரும் பாராட்டினர்.
சூரியன் மறைந்ததும் 6:34 மணிக்கு நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்று, மஹ்ரிப் (அந்தி) தொழுகைக்கான பாங்கு (அழைப்பொலி) ஒதப்பட்டது.
“இதயங்களால் ஒன்றிணைவோம்” என்ற தலைப்பின் கீழ் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சி அவ்வாறே நடைப்பெற்று முடிந்தது. இதில் அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ், விசிக, கம்னியூஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த உள்ளுர் பிரமுகர்களும், தொண்டு இயக்கங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜிவானந்தம், மஜக தலைவர்கள் – AS அலாவுதீன், ராவுத்தர்ஷா, மண்டலம் ஜெய்னுலாபுதீன், நாச்சிக்குளம் தாஜூதீன், ராசுதீன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் – ஆசைமணி, கோடிமாரி, அதிமுக நிர்வாகிகள் – தங்க கதிரவன், குணசேகரன், சிவா, ராதா கிருஷ்னன், பாஸித், மஜக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஹாரிஸ், விவசாயி அணி மாநிலச் செயலாளர் நாகை முபாரக், நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சாகுல், திட்டச்சேரி ரியாஸ், புரவாச்சேரி ஜாகிர், தோப்புத்துறை மன்சூர், ஏனங்குடி – யூசுப் தீன், முஜிப், மஞ்சகொல்லை சதக்கத்துல்லாஹ், தோப்புத்துறை அஹமத்துல்லாஹ், நாகூர் இஸ்மாயில், நாகை சாகுல்ஹமீது மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும் – தொண்டர்கள் உட்பட ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். அரங்கம் நிறைந்ததால் அரங்கிற்கு வெளியேயும் மேஜைகள் போடப்பட்டு மக்கள் உட்கார வைக்கப்பட்டன.
தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்,
27/05/2018.