காஞ்சி.ஆக24., நேற்று மாலை மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் திருப்போரூர் பகுதியில் மாவட்ட செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில செயலாளர் N.A.தைமிய்யா M.sc அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் சத்தார், MJTS மாவட்ட செயலாளர் ரபீக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING காஞ்சி தெற்கு மாவட்டம். 23.08.17
தமிழகம்
தமிழகம்
காவல்துறையின் மெத்தனபோக்கை கண்டித்து சாலைமரியல்..!! மஜக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..!!!
திருவண்ணாமலை.ஆக.23., திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பக்கிரிபாளையம் மற்றும் மேல்புழிதியூதிர் கிராமத்தில் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் கொடுரமான முறையில் கொள்ள படுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் காவல் துறையினர் மேத்தன போக்கினை கண்டித்து மாபெரும் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாய கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து திரளாக கொண்ட்டார்கள். குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் முஸ்லிம்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மஜக சார்பாக கோரிக்கை விடுத்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ட_அணி #MJK_IT_WING திருவண்ணாமலை மாவட்டம். 23.08.2017.
சிவகாசியில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு.!
சிவகாசி.ஆக.23., விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள். பின்னர், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் கன்மணி காதர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மதுரை மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், குவைத் மண்டல IKP நிர்வாகி சீனி முஹம்மது மற்றும் இராஜபாளையம் நிர்வாகிகள், சிவகாசி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING விருதுநகர் மாவட்டம். 23.08.17
சிவகாசியில் புதிய ஜவுலிகடையை மஜக மாநில பொருளாளர் திறந்துவைத்தார்…!
சிவகாசியில் புதிய ஜாவுலிகடையை மஜக மாநில பொருளாளர் திறந்துவைத்தார்...! சிவகாசி.ஆக.23., இன்று 23/08/17 விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்களின் ஜீ கலக்ஷன்ஸ் மென்ஸ்வேர் துணிகடையை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் துவங்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் கன்மணிகாதர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சிவகாசி நகர நிர்வாகிகள், இராஜபாளையம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். உடன் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மதுரை மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், குவைத் மண்டல நிர்வாகி சீனி முஹம்மது ஆகியோர் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING விருதுநகர் மாவட்டம். 23.08.17
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
கோவை.ஆக.23., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் சலீம், தொழிற் சங்க மாவட்ட செயலாளர் சுதீர் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்டதீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மஜக கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது! தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 22.08.17