சிவகாசியில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு.!

image

image

image

சிவகாசி.ஆக.23.,  விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள்.

பின்னர், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் கன்மணி காதர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மதுரை மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், குவைத் மண்டல IKP நிர்வாகி சீனி முஹம்மது மற்றும் இராஜபாளையம் நிர்வாகிகள், சிவகாசி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
விருதுநகர் மாவட்டம்.
23.08.17