புதுகை. ஏப்.14., தமுமுக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஆலங்குடி அப்துல் லத்தீப் அவர்கள் நேற்று 13.04.2018 மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது ஜான் முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிகழ்வில் கறம்பக்குடி மஜக நகர இளைஞரணி செயலாளர் ஆசை அப்துல்லாஹ் உடனிருந்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_மேற்கு 13.04.2018
தமிழகம்
தமிழகம்
மஜக பொருளாளரை விடுதலை செய்க! நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
நாகை. ஏப்.14., சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொருளாளர் ஹாரூன் ரசீது மற்றும் மஜக நிர்வாகிகளின் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்த காவல்துறையை கண்டித்தும் அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து விடுதலை செய்ய கோரியும் நாகை தெற்கு மாவட்ட பொறுப்புகுழு தலைவர் வடகரை M.பரகத் அலி தலைமையில் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் திட்டச்சேரி செய்யது ரியாசுதீன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சாகுல் ஹமீது, ஜாகிர் உசேன், முஜிபுர் ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் மன்சூர்,அல்லா பிச்சை, தெத்தி ஆரிப், பிஸ்மி யுசுப்,திருப்புண்டி அஜிஸ், ரெக்ஸ் சுல்தான், ஜலாலுதின், தம்ஜூதீன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இராமதாஸ் , புருனை மண்டல செயலாளர் தாஹா மரைக்காயர் , மஜக பகுருதீன் அலி, மஜக டேவிட் , ஒன்றிய
மஜக மாநில பொருளாளர் மீது தாக்குதல் நடத்தி கைது செய்த காவல் துறையை கண்டித்து, கோவை மாவட்ட மஜகவினர் போராட்டம்!
கோவை.ஏப்13., காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்திய தலைவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்திய மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறையைக் கண்டித்து மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது.இப்போராட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் சசி, கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட பொறுப்பாளர் பரமசிவம், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில் மஜக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனாஇஷாக், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மதுரபீக், சிங்கை சுலைமான், ABT.பாருக், ATR.பதுருதீன், முஸ்தபா, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், துணை செயலாளர்கள் சபீர், அன்சர், சுற்று சூழல் அணி மாவட்ட
பொய் வழக்குகளை வாபஸ் பெறுக!
(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை) நேற்று பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய தமிழின உணர்வாளர்கள் மீது காவல்துறை பல வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது உள்ளிட்ட 8 மஜகவினரும், ஏராளமான நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட தொண்டர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். காவேரி மேலாண்மை வாரியத்திற்காக போராடியவர்கள் மீது தடியடி உள்ளிட்ட மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையின் செயல் நியாயமற்ற செயலாகும். எனவே அனைவரின் மீதான வழக்குகளையும் திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவன், தனியரசு MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA.
விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடுவோம்! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
சென்னை.ஏப்.13., சென்னை சேப்பாக்கத்தில் தமிழக விவசாயிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், தலைவர் காவேரி தனபாலன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA கலந்துக் கொண்டு உறையாற்றினார். அப்போது காவேரி மேலாண்மை அமைக்க கோரி தமிழக விவசாயிகள் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் மஜக பங்கேற்கும் என்றார். கர்நாடகவில் சித்தா ராமையாவும், எடியுரப்பாவும், தேவ கொளடாவும் ஒரே குரலில் காவேரிக்காக போராடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்கிறோம். முதலில் இவ்விசியத்தில் திமுகவும், அதிமுகவும் சண்டை போடுவதை நிறுத்த வேண்டும். எல்லோரும் இணைந்து காவேரிக்காக குரல் கொடுக்கவே மக்கள் விரும்பிகிறார்கள் என்று பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்