வேலூர்.ஏப்.28., கோடை காலத்தின் தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் 30வது கிளை சார்பில் சைதாப்பேட்டை பகுதியில் நீர், மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் #முஹம்மத்_யாஸீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. 30வது கிளை நிர்வாகிகள் #மாலிக், #அமனுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் #S_G_அப்சர்_சையத் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் மோர், வெள்ளரி, தர்பூசணி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் உசேன், சையத் உசேன், ஷமீல், சையத் காதர், சலீம், மண்டல நிர்வாகிகள் முஹம்மத் பாயிஸ், ஷேக் இம்ரான், அஸ்கர் அலி, ஆசிப் அப்ரோஸ், ஜாபர், ரிஸ்வான், காதர், சையத் கலீம், அத்திக்குர் ரஹ்மான், இஸ்மாயில், ஜாபர், இம்ரான், மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் வருகை தந்த பொதுமக்கள் அனைவரும் மஜகவினரின்
தமிழகம்
தமிழகம்
வேலூர் மாவட்டத்தில் மஜகவின் புதிய கிளை உதயம்…!
வேலூர்.ஏப்.27., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம், கொணவட்டம் பகுதி 56வது வார்டு கிளை நிர்வாகம் தேர்வு மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கீழ்காணும் நபர்கள் கிளை நிர்வாகிகளாக ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டு தலைமைக்கு பந்துரை செய்யப்பட்டனர். கிளை செயலாளர் : சாதிக் கிளை பொருளாளர் : சிக்கந்தர் கிளை துணை செயலாளர்கள் : இர்பான், தாஜுத்தீன், R.ரபீக். அதன்பின்னர் கொணவட்டம் பகுதியில் உள்ள கொடிகம்பம் புதுப்பிக்கப்பட்டு புதிய கொடி ஏற்றப்பட்டது. கொணவட்டம் பகுதியை சேர்ந்த நிசார், ஆதி பாஷா ஆகியோர் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக மஜகவில் இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமீன் உடன் இருந்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
தமிழர்களை மத்திய அரசு மீண்டும் ஏமாற்றியிருக்கிறது..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேட்டி..!!
தஞ்சை.ஏப்.27., காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தொடர்ந்து தாமதங்களையும், குழப்பங்களையும் மத்திய அரசு செய்துவருகிறது. இதுகுறித்த வழக்கில் இன்று மீண்டும் இரண்டு வார கால அவகாசத்தை உச்சநீதி மன்றத்தில் கேட்டிருக்கிறது. இது குறித்து இன்று (27/4/2018) தஞ்சையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மீன்டும் இரண்டு வார கால அவகாசம் கேட்டிருப்பதன் மூலம், மத்திய அரசு தமிழர்களை மீண்டும் ஏமாற்றியிருக்கிறது. கர்நாடக தேர்தலில் பாஜகவின் லாபங்களுக்காக மத்திய அரசு இவ்வாறு செயல்படுகிறது என்பது மீன்டும் நிருபணமாகி இருக்கிறது. மத்திய அரசு பச்சை துரோகத்தை தமிழர்களுக்கு செய்திருக்கிறது .இது கூட்டாட்சி தத்துவத்தின் நீதிக்கு எதிரானது. உச்சநீதி மன்றம் இந்த அநீதிக்கு துணை போகக்கூடாது. மத்திய அரசின் நடவடிக்கைகள் தமிழக விவசாயிகளின், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. இவ்வாறு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இப்பேட்டியின் போது தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் J.S.ரிபாய், A.S.அலாவுதீன், துணைப் பொதுச்செயலார் மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர் வழுத்தூர் சேக், தஞ்சை
மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
அறந்தாங்கி.ஏப்.25., #மனிதநேய_ஜனநாயக_கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25.04.18 புதன் காலை 10.30 மணியளவில் அறந்தாங்கி கிருஷ்ணபவன் ஹோட்டல் மேல்தளத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் #இ_முபாரக்_அலி தலைமை தாங்கினார், #தகவல்_தொழில்நுட்ப_அணி மாநில செயலாளர் #ஏ_எம்_ஹாரிஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் எம்.பி.சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.அஜ்மீர் அலி, மற்றும் எஸ்.ஒளி முகம்மது தீர்மானங்களை முன்மொழிந்தனர். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் எ.அப்துல் ஹமீது, மாவட்ட தகவல், தொழில்நுட்ப அணிச் செயலாளர் அ.அப்துல் ஜமீன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் கே.ஷாஜஹான், அறந்தாங்கி நகர செயலாளர் டி.ஜகுபர் சாதிக், நகர பொருளாளர் அ.அப்துல் கரீம், ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். இந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. 1. பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். நடிகர் எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி கொச்சையான கருத்தை கூறி இருந்தார். அவரது கருத்துக்கு பத்திரிகையாளர்கள் உணர்வுபூர்வமாய் எதிர்ப்பை காட்டினார்கள். இதற்காக 30 செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது பல வழக்குகளை பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. உயிரையும்
காவிரி மேலான்மை வாரியம் அமைக்க கோரி சமக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் மஜக பொருளாளர் கண்டன உரை..!
சென்னை. ஏப்.25., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீது பங்கேற்று உரையாற்றினார். சிறையிலிருந்து விடுதலையாகி நேராக சமக நடத்திய காவிரி உரிமை போராட்டத்தில் ஹாரூன் ரஷீது பங்கேற்றார். இப்போராட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உரையாற்றினார். அவர்களுடன் மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, சீனி முகம்மது உட்பட மஜக சொந்தங்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்