தஞ்சை.ஏப்.27., காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தொடர்ந்து தாமதங்களையும், குழப்பங்களையும் மத்திய அரசு செய்துவருகிறது. இதுகுறித்த வழக்கில் இன்று மீண்டும் இரண்டு வார கால அவகாசத்தை உச்சநீதி மன்றத்தில் கேட்டிருக்கிறது.
இது குறித்து இன்று (27/4/2018) தஞ்சையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மீன்டும் இரண்டு வார கால அவகாசம் கேட்டிருப்பதன் மூலம், மத்திய அரசு தமிழர்களை மீண்டும் ஏமாற்றியிருக்கிறது. கர்நாடக தேர்தலில் பாஜகவின் லாபங்களுக்காக மத்திய அரசு இவ்வாறு செயல்படுகிறது என்பது மீன்டும் நிருபணமாகி இருக்கிறது.
மத்திய அரசு பச்சை துரோகத்தை தமிழர்களுக்கு செய்திருக்கிறது .இது கூட்டாட்சி தத்துவத்தின் நீதிக்கு எதிரானது. உச்சநீதி மன்றம் இந்த அநீதிக்கு துணை போகக்கூடாது. மத்திய அரசின் நடவடிக்கைகள் தமிழக விவசாயிகளின், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
இவ்வாறு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இப்பேட்டியின்
போது தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் J.S.ரிபாய், A.S.அலாவுதீன், துணைப் பொதுச்செயலார் மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர் வழுத்தூர் சேக், தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் ஜப்பார் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_மாநகர்_மாவட்டம்.