அறந்தாங்கி.ஏப்.25., #மனிதநேய_ஜனநாயக_கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25.04.18 புதன் காலை 10.30 மணியளவில் அறந்தாங்கி கிருஷ்ணபவன் ஹோட்டல் மேல்தளத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் #இ_முபாரக்_அலி தலைமை தாங்கினார், #தகவல்_தொழில்நுட்ப_அணி மாநில செயலாளர் #ஏ_எம்_ஹாரிஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் எம்.பி.சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.அஜ்மீர் அலி, மற்றும் எஸ்.ஒளி முகம்மது தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் எ.அப்துல் ஹமீது, மாவட்ட தகவல், தொழில்நுட்ப அணிச் செயலாளர் அ.அப்துல் ஜமீன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் கே.ஷாஜஹான், அறந்தாங்கி நகர செயலாளர் டி.ஜகுபர் சாதிக், நகர பொருளாளர் அ.அப்துல் கரீம், ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.
இந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
1. பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.
நடிகர் எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி கொச்சையான கருத்தை கூறி இருந்தார். அவரது கருத்துக்கு பத்திரிகையாளர்கள் உணர்வுபூர்வமாய் எதிர்ப்பை காட்டினார்கள். இதற்காக 30 செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது பல வழக்குகளை பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. உயிரையும் கவணத்தில் எடுக்காமல் சேவை செய்துவரும் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் எந்த நிபந்தனையும் இல்லாமல் திரும்ப பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
2. அரசு பணிகளை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது.
தமிழகத்தில் படித்துவிட்டு பதிவு செய்திருப்பவார்கள் 80 லட்சம் பேர். இந்நிலையில் 3 லட்சம் அரசு பணிகளுக்கு பணி அமர்த்த தமிழக அரசு அவுட்சோர்சிங் எனும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து நிரப்ப முனைப்பு காட்டுகிறது. அரசு பணிகள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டால் ஏழை எளிய மக்களுக்கு அரசு பணி எட்டாகனியாகிவிடும். எனவே அரசானை எண் : 56ஐ திரும்ப பெறவேண்டும். ஆதிசேஷையா குழுவை கலைக்கவேண்டும். அவுட்சோர்ங் முறையை ரத்து செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
3. SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 6வது அட்டவணையில் சேர்க்கவேண்டும்.
தலித் மக்களுடைய பல தியாகத்திற்கு பிறகு SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது ஆனாலும்கூட புகாரை பெறுவதிலும் குற்றப்பத்திரிக்கை பதிவதிலும் காலதாமதமும் அழக்கழிப்பும் வழமையாகிவிட்டது. இந்நிலையில் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துபோகக்கூடிய அளவிற்கு சட்ட திருத்தத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது. எனவே SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியல் சாசனத்தில் 9வது அட்டவணையில் சேர்த்து சட்டபாதுகாப்பு அளிக்குமாறு மத்திய அரசை வாலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
4. காவிரிக்காக ஜனநாயக வழியில் போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எகோரி தமிழகத்தில் பலவிதமான போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டங்களில் உணர்வுபூர்வமாய் ஜனநாயக வழியில் போராடிய மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரையும் கைது செய்து அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் சிலர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதுபோன்ற அடக்குமுறைகள் ஜனநாயக வாழியை தடுக்கும் போக்காகும். எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராடியவர்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
5. அறந்தாங்கி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தவேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது நகரமாக அறந்தாங்கி உள்ளது. ஒருநாளைக்கு பல ஆயிரம் மக்கள் அறந்தாங்கி பேருந்து நிலையத்தை அடைகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கக்கூட போதிய இடமில்லை. பயணிகள் அடிப்படை தேவைகளுக்கு போதிய இடமும் வசதிகளும் இல்லை. எனவே அறந்தாங்கி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி பயணிகளுக்குரிய வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
25.04.2018