கோவை.அக்.07.,மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் அதிகமான இரத்ததானம் செய்ததை பாராட்டி கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருதினை மஜக மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 07.10.17
தமிழகம்
தமிழகம்
மஜக பஹ்ரைன் மண்டல ஆலோசனைக்கூட்டம்…
பஹ்ரைன்.அக்.06,.மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் மஜகவின் அலுவலகத்தில் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் நவம்பர் 3ஆம் தேதி பஹ்ரைன் மண்டலத்தின் சார்பில் நடக்கவிருக்கும் " சமூக நீதி மாநாடு " பற்றியும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்கள் விளக்கினார். மஜக வின் செயல்பாடுகள் கண்டு சில சகோதரர்கள் தங்களை இக்கூட்டத்தில் மஜக-வில் இணைத்துக்கொண்டனர். புதிய பாதை, புதிய பயணத்தின் தொடக்கமாக பஹ்ரைன் மண்டலம் நடத்தவிருக்கும் சமூக நீதி மாநாட்டை சிறப்பாக நடத்திட மஜகவின் இளம் செயல்விரர்களும், தொண்டர்களும் உற்சாகமாக கிளம்பிவிட்டனர். மாலை 7:30 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #பஹ்ரைன்_மண்டலம் 06-10-2017
ஜமாத்துல் உலமா சபை தலைவரை மஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து..!
நெல்லை.அக்.06., ஜமாத்துல் உலமா சபையின் மாநில தலைவராக புதிதாக தேர்வு செய்யப்படிருக்கும் கண்ணியமிகு பி.ஏ.காஜா முகைதீன் பாக்கவி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் வாஹித் அவர்கள் தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் கலீல் ரஹ்மான் உட்பட மாவட்ட நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பியதோடு, ஜமாத்துல் உலமா தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்கள். விரைவில் நேரில் வந்து சந்திப்பதாகவும் கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மாவட்டம் 06.10.17
சேலத்தில் டெங்குவால் சிறுமி உயிரிழப்பு மஜகவினர் சாலை மறியல்..!
சேலம்.அக்.06., சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கலை சேர்ந்த 7 வயது சிறுமி பல்கீஸ் என்பவருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் சிறுமியின் நிலைமை மிகவும் மோசமானது. இதை அறிந்த சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் விரைந்து சென்று மருத்துவமனை தலைமை அதிகாரியை சந்தித்து பேசியும் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் அதை தொடர்ந்து மஜக தலைமையில் இன்று மதியம் 3 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாட்ஷா தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் A.மெஹபூப் அலி, OS. பாபு, மாவட்ட பொருளாளர் அமீர் உசேன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஸ்லம், தொழிற்சங்க செயலாளர் சதாம், பொருளாளர் சதாம் உசேன், வர்த்தக அணி செயலாளர் முகம்மது அலி மற்றும் மஜக மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்ததின் பேரில்ஆட்சியர் இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சேலம்_மாநகர்_மாவட்டம் 06-10-2017
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் மஜக மாநில பொருளாளர் சந்திப்பு..!
சென்னை.அக்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் நேற்று (05.10.2017) மாலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.சீமான் அவர்களின் இல்லத்திற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதுசமயம் தற்போதையை அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். இச்சந்திப்பில் மஜக மாநிலச் செயலாளர் என்.எ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், முஹம்மது சைபுல்லாஹ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் சிக்கந்தர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் A.செய்யது அபுதாஹிர், மத்திய சென்னை மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் இஸ்மாயில் மற்றும் மத்திய சென்னை மாவட்ட செயல்வீரர்கள் அஸ்கர் , அம்ஜத் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம்_சென்னை 06.10.17