பஹ்ரைன்.அக்.06,.மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் மஜகவின் அலுவலகத்தில் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வரும் நவம்பர் 3ஆம் தேதி பஹ்ரைன் மண்டலத்தின் சார்பில் நடக்கவிருக்கும் ” சமூக நீதி மாநாடு ” பற்றியும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்கள் விளக்கினார்.
மஜக வின் செயல்பாடுகள் கண்டு சில சகோதரர்கள் தங்களை இக்கூட்டத்தில் மஜக-வில் இணைத்துக்கொண்டனர்.
புதிய பாதை, புதிய பயணத்தின் தொடக்கமாக பஹ்ரைன் மண்டலம் நடத்தவிருக்கும் சமூக நீதி மாநாட்டை சிறப்பாக நடத்திட மஜகவின் இளம் செயல்விரர்களும், தொண்டர்களும் உற்சாகமாக கிளம்பிவிட்டனர்.
மாலை 7:30 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#பஹ்ரைன்_மண்டலம்
06-10-2017