சேலம்.அக்.06., சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கலை சேர்ந்த 7 வயது சிறுமி பல்கீஸ் என்பவருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் சிறுமியின் நிலைமை மிகவும் மோசமானது.
இதை அறிந்த சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் விரைந்து சென்று மருத்துவமனை தலைமை அதிகாரியை சந்தித்து பேசியும் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் அதை தொடர்ந்து மஜக தலைமையில் இன்று மதியம் 3 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாட்ஷா தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் A.மெஹபூப் அலி, OS. பாபு, மாவட்ட பொருளாளர் அமீர் உசேன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஸ்லம், தொழிற்சங்க செயலாளர் சதாம், பொருளாளர் சதாம் உசேன், வர்த்தக அணி செயலாளர் முகம்மது அலி மற்றும் மஜக மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்ததின் பேரில்ஆட்சியர் இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சேலம்_மாநகர்_மாவட்டம்
06-10-2017