ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைபாடாகும்.
இதை சட்டமன்றத்தில் மஜக சார்பில் நான் வலியுறுத்தி பேசியிருக்கிறேன்.
இந்நிலையில் இன்று வன்னிய சமுதாய மக்கள் தலைநகர் சென்னையில் வன்னிய மக்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய நிலையில், தமிழக அரசு அனைத்து சமூக மக்களின் புள்ளி விபரங்களை சேகரிக்கும் வகையில் சாதி வாரி இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுக்கும் வகையில் ஆணையம் அமைக்க முடிவெடுத்திருப்பதற்கு மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
இந்த ஆணையம் துரிதமாக முடிவெடுத்து அனைத்து மக்களுக்கும் சமூக நீதியை நிலை நாட்ட ஆவணம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
1.12.2020