நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் மஜக மாநில பொருளாளர் சந்திப்பு..!

image

image

சென்னை.அக்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் நேற்று (05.10.2017) மாலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.சீமான் அவர்களின் இல்லத்திற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அதுசமயம் தற்போதையை அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.

இச்சந்திப்பில் மஜக மாநிலச் செயலாளர் என்.எ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், முஹம்மது சைபுல்லாஹ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் சிக்கந்தர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் A.செய்யது அபுதாஹிர், மத்திய சென்னை மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் இஸ்மாயில் மற்றும் மத்திய சென்னை மாவட்ட செயல்வீரர்கள் அஸ்கர் , அம்ஜத் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்_சென்னை
06.10.17