பாசிச சிந்தாந்தத்தை வழுவாக எதிர்க்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரணியில் திரள_வேண்டும்..!

கத்தாரில்மஜகபொருளாளர்எஸ்எஸ்ஹாரூன்ரசீது_சூழுரை..!!


கத்தார்.டிசம்பர்.08.,

கத்தார் தலைநகர் தோஹாவில் மஜக சார்பு அயல் நாட்டுபிரிவான மனிநேய கலாச்சார பேரவையின் சார்பாக கடந்த (06.12.2019) அன்று மாலை சிறப்பு கருத்தரங்கம் “சகிப்புத்தன்மையால் சமுதாயம் அடையும் நன்மைகள்” எனும் தலைப்பில் நடைபெற்றது.

கருத்தரங்கத்தை இறைவசனம் ஓதி கைஸ் துவக்கிவைத்தார்கள்.

இக்கருத்தரங்கத்திற்கு MKP மண்டல துணைச் செயலாளர் சிதம்பரம் நூர் முஹம்மத் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது கலந்து கொண்டார்கள்.

தோஹா மாநகரச் செயலாளர் ஷேக் அலாவுதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சனையா மாநகரச் செயலாளர் பரங்கிப்பேட்டை ஃபாரூக் வரவேற்புரை நிகழ்த்தினார்கள், அதைத்தொடர்ந்து மண்டல துணைச்செயலாளர் திருச்சி நசீர் பாஷா, Alkhor முன்னால் மாநகரச் செயலாளர் நிஸார் ஆகியோர் பாபர் மஸ்ஜிதின் அநீதியான தீர்ப்பை இஸ்லாமியர் அமைதியாக எதிர்கொண்ட விதம், இஸ்லாமியர்களுக்கு ஒட்டு மொத்த இந்துக்களின் பேராதரவை எவ்வாறு அளித்தனர் போன்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.

இரண்டாம் அமர்வில் கத்தார் QTv நிர்வாகி சகோதரர் சுஜா உலகெங்கிலும் உள்ள தமிழ் மொழி பேசும் மதம், ஜாதி கடந்து எவ்வாறு ஒன்றினைய வேண்டும் என்று கருத்துரையாற்றினார்.

https://m.facebook.com/story.php?story_fbid=2141699259263171&id=700424783390633

இந்நிகழ்வில் Yafa Cargo General Manager ஷேக் மொய்தீன், கத்தார் திமுக செயலாளர், அப்துல் ரசீது, காயிதே மில்லத் பேரவை தஸ்தகீர், கத்தார் விசிக சண்முக பாண்டியன், கத்தார் பரங்கிப்பேட்டை ஜமாத் சிராஜ்தீன், கரீம் டைம்ஸ் திருச்சி கரீம் போன்ற பல்வேறு இயங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு MKP கத்தார் மண்டலம் செய்யும் பணிகளை பாராட்டி கருத்துறையாற்றினார்கள்.

இதை தொடர்ந்து Yafa Cargo நிறுவனர் Dr.SM ஹைதர் பாசிச ஆட்சியில் கார்கோ துறையில் ஏற்படும் நெருக்கடிகளை கண்டித்து பேசினார். ஸியாவுதீன் மதனி அவர்கள் மனிதர்கள் கொடுக்கும் சில தீர்ப்பின் அவலங்கள் மற்றும் இஸ்லாம் கூறும் தீர்வுகள் பற்றி விளக்கி பேசினார்.

இறுதியாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பாசிசத்தை எவ்வாறு வீழ்த்துவது என்றும், பாஜக வாக்கு எந்திரத்தில் செய்யும் தில்லுமுல்லுகளையும் அதை தவிர்க்க தேர்தலை பழைய ஓட்டுச்சிட்டு முறைக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தை பற்றியும், பாஜகவின் கூட்டணியில் இருந்த சிவசேனா இன்று பாஜகவை எதிர்ப்பதை குறித்தும், ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைத்து பாஜகவை எவ்வாறு எதிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் MKP மண்டலச் செயலாளர் கீழக்கரை ஹூசைன், ஒருங்கிணைப்பாளர் ஆயங்குடி யாசீன், மண்டல ஆலோசகர் உத்தமபாளையம் உவைஸ், மண்டல துணைச் செயலாளர் சென்னை ஃகதீர் அஹ்மத், மண்டல துணைச் செயலாளர் ஹாஜி முஹம்மத், மண்டல மருத்துசேவை அணிச் செயலாளர் பொதக்குடி புருகான், சனையா மாநகர பொருளாளர் மேலப்பாளையம் ஜூபைர், தோஹா மாநகரப் பொருளாளர் கூத்தாநல்லூர் ஹக்கீம், தோஹா மாநகர துணைச் செயலாளர் ராம்நாடு ஹக்கீம் ஆகியோர் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தனர்.

நிறைவாக மண்டல தொண்டரணிச் செயலாளர் நாகை ஃபர்மானுல்லா நன்றி கூறினார்.

தகவல்;
#மனிதநேயகலாச்சாரபேரவை
#MKP_IT_WING
#கத்தார்_மண்டலம்
06.12.2019