சூடான் தீ விபத்தில் நாகை வாலிபர் மரணம் : மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்!

டிச 8,

சூடான் நாட்டில் ஏற்பட்ட கேஸ் டேங்கர் லாரி ஒன்று வெடித்த தீ விபத்தில், 3 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் கருகி இறந்துள்ளனர்.

அவர்களில் நாகை தொகுதி திட்டச்சேரி அருகில் உள்ள ஆலங்குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற 25 வயது வாலிபரும் ஒருவர்.

முதலில் இவர் இறந்தாரா? காயமடைந்துள்ளாரா? என்று குழப்பம் நிலவியது. பிறகு அவரது துயர மரணம் உறுதி செய்யப்பட்டது.

இன்று மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் , அவரது வீட்டிற்கு சென்று , பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு , அரசு வேலை பெற்று தர முயற்சி செய்வதாகவும், இது குறித்து முதல்வரிடம் பேசுவதாகவும் கூறினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், இறந்த 3 தமிழர்கள் உட்பட அனைவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் , வாய்ப்பு இருப்பின் இறந்தவர்களின் உடலை அவர்களது குடும்பத்தினரிடம் கொண்டு வந்த சேர்க்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசு, இறந்த 3 தமிழர்களின் குடும்பத்திற்கும் , அரசு வேலை தருவதோடு,நிதி உதவியும் செய்ய முன் வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

.அவருடன் நாச்சிக்குளம் தாஜ்தீன், நாகை முபாரக், திட்டச்சேரி ரியாஸ் , பாசித், இப்ராஹிம், பரீத், கலீல், அசார், ராகவன் , முருகன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

தகவல்,

#நாகைசட்டமன்றஉறுப்பினர்_அலுவலகம்

https://m.facebook.com/story.php?story_fbid=2142612275838536&id=700424783390633