முஸ்லிம்பெண்ணின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்ட இந்து சகோதரர்! :- மஜக இல்ல மணவிழாவில் நல்லிணக்கம்!

தஞ்சையில் இன்று மதிமுகவின் வளைகுடா அமைப்பாளர் பஷீர், மனிதநேய ஜனநாயக கட்சியின் பஹ்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் ஆகியோரின் சகோதரி நசீபா முனவராவுக்கும், மணமகன் சம்சுதீன் அவர்களுக்கும் நிக்காஹ் எனும் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திமுக இலக்கிய அணி செயலர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் நிஜாமுதீன், தமிழக மக்கள் ஐனநாயக கட்சி தலைவர் KM ஷெரீப் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பிறகு அமைச்சர் காமராஜ் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

இத்திருமணத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

மணமகள் குடும்பத்தினரான வல்லம் பஷீரும், வல்லம் ரியாசும் தந்தையை இழந்தவர்கள்.

அவர்களது குடும்பத்தை தந்தை ஷேக் தாவூதின் நண்பர் வடுவூர் ரவி அவர்கள் தன் குடும்பத்தோடு குடும்பமாக அன்புகாட்டி அரவணைத்து நட்புக்கு மரியாதை செய்து வருகிறார்.

தன் நண்பரின் மகன் வல்லம் பஷீரின் திருமணம் போலவே அவரது தங்கையின் திருமணத்தையும் முன்னின்று நடத்தி கொடுத்துள்ளார்.

தங்கள் தந்தையின் நண்பரை மதிக்கும் வகையில் சகோதரர்கள் வல்லம் பஷீரும், ரியாசும், இஸ்லாமிய வழக்கப்படி,திருமண ஒப்பந்தத்தில் மணமகளின் இரு சாட்சிகளில் ஒருவராக ரவி அவர்களை கையெழுத்திட முடிவு செய்தனர்.

அவ்வாறே நிக்காஹ் படிவத்தில் கையழுத்திட செய்து அவரை கெளரவப்படுத்தி உள்ளனர்.

வல்லம் ஜமாத்தும் இந்த நல்லுறவை பாராட்டும் வகையில், அதை அனுமதித்து சிறப்பித்துள்ளது.

இதை திருமண நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

இது தான் நமது தமிழ் மண்ணின் மதச்சார்பின்மை என தமிமுன் அன்சாரி MLA., கூற, இந்த உறவுகளை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்று அதை வழிமொழிந்தார் தனியரசு MLA.

மணமக்களை நிறைவாக வாழ்த்திய வைகோ அவர்கள் இந்த நட்பும், உறவும்தான் இத்திருமணம் மூலம் இந்தியாவுக்கு நாம் சொல்லும் செய்தி என்று பூரித்தார்.

இந்நிகழ்வில், மதிமுக துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை.சத்யா, துரை பால கிருஷ்ணன், மஜக மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜ்தீன், ராசூதீன், மாநில துணைச் செயலாளர்கள் ஷமீம் அஹ்மது , நாகை முபாரக், காயல். சாகுல், MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் பழனி சாந்து முகம்மது, இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் அன்வர், தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அஹ்மது கபீர், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சலாம், திருச்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் திரளாக பங்கேற்றனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சைமாநகர்மாவட்டம்.