ஏப்ரல்:16, மஜக சார்பு வெளிநாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் தமிழகத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் பங்கேற்ற இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பேசினார். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.. 1.குவைத் மன்னருக்கு நன்றி கொரோனா காலக்கட்டத்தில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்த குவைத் மன்னர் மேதகு நவாப் அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்களுக்கு இக் கூட்டம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. 1. குவைத் அரசுக்கு பாராட்டு வன்முறையையும், மத வெறுப்பையும் உருவாக்கி தமிழ் சமூகத்தில் பதட்டத்தை தூண்டும் பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்த குவைத் அரசுக்கு இக் கூட்டம் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது. 2. பெரியார் தொண்டருக்கு இரங்கல் குவைத்தில் தமிழர்களுக்கு மத்தியில் மனித நேய சேவையாற்றி , பெரியார் வழியில் பயணித்து கடந்தாண்டு உயிர் நீத்த பெரியார் பெருந்தொண்டர் ஐயா.செல்லப் பெருமாள் அவர்களின் பணிகளை இக் கூட்டம் நன்றியுடன் நினைவு கூறுகிறது 3. வெளிநாடுகளில் உயிர் நீத்தவர்களின் உடல்களை கொண்டு வரும் போது, சென்னை விமான நிலையத்தில்
அயலகச் செய்திகள்
பீஸ்ட் திரைப்படம் பதட்டத்தை தூண்டுகிறது… குவைத் MKP இஃப்தார் நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்!
குவைத், ஏப் 15, குவைத்தில் தமிழக மக்களுக்கு மத்தியில் பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் இன்று இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மக்கள் எழுச்சியுடன் நடைப்பெற்றது. குவைத் மண்டல MKP செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி Ex, Mla அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். நிகழ்வு நடந்த டெஸ்மா டீச்சர் அரங்கிற்கு பெரும் திரளான தமிழக மக்கள் வருகை தந்திருந்தனர். அரங்கின் நுழைவாயிலுக்கு பிராமண சமூகத்தை சேர்ந்த நீதியரசர் ராஜேந்திர சச்சார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அது போல அரங்கத்திற்கு இந்தியாவின் சிற்பியும், உலகம் கவர்ந்த பிரதமருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பெயரிடப்பட்டிருந்தது. இது இவர்களை போன்ற பன்முக சிந்தனை மிக்க தலைவர்களைத்தான் உலகம் விரும்புகிறது என்பதை சொல்லாமல் சொல்வது போல இருந்தது! அது போல இந்தியர்கள், தமிழர்கள் என அனைவருக்கும் வாழ்வளிக்கும் குவைத் அரசுக்கு நன்றி பாராட்டும் வகையில் சமீபத்தில் மரணித்த மேதகு
குவைத் KTIC நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி…!
ஏப்ரல்:15, வளைகுடா சுற்றுபயணத்தின் ஒரு பகுதியாக குவைத் வந்துள்ள மனிதநேய ஜனநாயக கட்சி யின் பொதுசெயலாளர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவர் இன்று குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-TIC) ஏற்பாடு செய்த அமர்வில் 'பத்ரு யுத்தம் ஏற்படுத்திய மைல்கல் ' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... இது ரமலான் நோன்பின் நடுப்பகுதி. இதில் பத்ரு யுத்தம் குறித்து பேசும் போது; அந்த வரலாற்றில் பயணிக்கும் போது ; நமது உடல் சிலிர்ப்பதை தவிர்க்க முடியாது. பெரும்படையை சிறு படையினர் வெற்றி கொண்ட வரலாறு இது. பெரும் படையுடன் வந்த மாவீரன் அலெக்ஸாண்டரை, வடமேற்கு இந்தியாவில் ஜீலம் நதிக்கரையில், மன்னன் போரஸ் எதிர்த்து நின்று போரிட்டான். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. இப்படி பல வரலாறுகள் உண்டு. இங்கே வரலாறு வேறு. ஆயிரம் பேர் கொண்ட எதிரிப்படையை, நபிகள் நாயகத்தின் தலைமையிலான 313 பேர் கொண்ட சிறு படை எதிர்த்து நின்று வீரச் சமர் புரிந்து வெற்றிக் கண்டது. எதிரிகளை ஊடறுத்து சென்று தாக்கி அவர்கள் பெற்ற வெற்றி மகத்தானது. வரலாற்றில் புகழ் பூக்களால் சூழப்பட்டிருக்கிறது. நபிகள் நாயகம் அவர்கள்
குவைத் MISK இப்தார் நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி…!
குவைத்:ஏப் 14 வளைகுடா பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று மாலை மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்கள் குவைத் வருகை தந்தார். அவருக்கு குவைத் மனிதநேய கலாச்சார பேரவையினர் (MKP) விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு முதல் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு சகோதரர்கள், பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து வருகின்றனர். இன்று மாலை குவைத்தில் தமிழக தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் பெரும்பான்மையாக பங்கேற்ற Misk பள்ளி இப்தார் நிகழ்வில் உரையாற்றினார். அவருக்கு மிஸ்க் அமைப்பின் தலைவர் மெளலவி முனிர் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர். அங்கு அவர் பேசிய உரையின் முக்கிய பகுதியில் பின்வருமாறு.. தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து உழைக்க வந்திருக்கும் நீங்கள் பொது சேவையில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக மேம்படவேண்டும் எத்தனை நாட்களுக்குதான் தொழிலாளர்களாகவும், அலுவலக ஊழியராகவும் இருப்பீர்கள்? இந்த நிலை மாறவேண்டும். உங்களை மேலும் முன்னேற்றுவதில் திட்டமிடவேண்டும். புதியவற்றை கற்றுகொள்ளுங்கள். மாறிவரும் புதிய உலகின் போட்டிகளுக்கு உங்களை தயார் படுத்துங்கள். இந்த உலகம் பரந்து விரிந்தது வளைகுடாவில் எல்லோருக்கும் வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது ஏழையாக பிறந்தது குற்றமில்லை, ஏழையாக இறப்பதுதான் குற்றம்
MKP கத்தார் மண்டலம் சார்பாக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மாபெரும் இரத்தத்தான முகாம்.!
கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பாக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மாபெரும் இரத்த தான முகாம் ஆசியன் டவுன் (சனயா பகுதி) மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் (18-12-2021) அன்று மாலை நடைபெற்றது. கத்தாரிலுள்ள இந்திய தூதரகத்தின் கிளை அமைப்பான ICC நிர்வாகி திரு அனிஷ் அவர்கள் இரத்ததான முகாமை துவக்கிவைத்தார். நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக ICC தலைவர் திரு.பாபுராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார், QMF கத்தார் தலைவர் கடலூர் முஸ்தஃபா, ஐக்கிய தமிழ் மன்ற ( UTF ) ஒருங்கிணைப்பாளர் நாசர், கத்தார் சஹாபாக்கள் நூலக நிர்வாகிகள், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் அவர்கள் MKP கத்தார் மண்டல நிர்வாகம் சார்பாக 2022 ஆண்டிற்கான காலண்டரை வெளியீடு செய்தார். இம்முகாமில் 120-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் உத்தமபாளையம் உவைஸ், மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிசார் அஹமது, மண்டல துனைச் செயளாலர்கள்