சென்னை.அக்.20., மனிதநேய ஜனநாயக கட்சி தென்சென்னை மாவட்டம், வேளச்சேரி பகுதி சார்பாக அடையாரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இன்று (20.10.2017) மதியம் 2.00 மணியளவில் நடைப்பெற்றது. இம்முகாம் வேளச்சேரி பகுதி செயலாளர் அடையார். அன்வர்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் ஜெ.ஷமீம் அஹமது கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மேலும் தென்சென்னை மாவட்ட செயலாளர் அடையார்.இக்பால் மற்றும் பகுதி நிர்வாகிகள், அபுபக்கர், பீர் முஹம்மது, இக்பால், நாகூர் மீரான், செய்யது, சேக், உமர், ஜாகீர், ஜூபையர், ஜப்பார், ஜாபர், நவ்ஷாத் மற்றும் தொழில் அதிபர் சேட் ஃபர்னிச்சீங் சேட் பாய் உள்ளிட்ட பகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்கள். இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் அருந்தி பயன் அடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேளச்சேரி_பகுதி #தென்சென்னை_மாவட்டம்.
தமிழகம்
தமிழகம்
மஜக குடியாத்தம் நகர ஆலோசனை கூட்டம்..!
வேலூர்.அக்.19.,மனிதநேய ஜனநாயக கட்சி குடியாத்தம் நகர ஆலோசை கூட்டம் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருப்பு குழு தலைவர் SMD.நவாஸ் கலந்துகொண்டார்கள். குடியாத்தம் நகரம் முழுதும் கிளைகள் அமைத்தல், நகர சீரமைப்பு மற்றும் அதிக உறுப்பினர்கள் சேர்க்கை என இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதில் நகர துணை செயலாளர் N.சலீம், கிளை நிர்வாகிகள் அல்தாப், சித்திக், முபாரக், கலீம், அலீம், இர்பான், ரபி, முபாரக், காஜா, அல்து, நிஜாம், உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #குடியாத்தம்_நகரம் 19.10.2017
தொண்டி பேரூர் மஜக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..
தொண்டி.அக்.18., மனிதநேய ஜனநாயக கட்சி(மஜக) தொண்டி பேரூர் கிளை சார்பாக பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நேற்று (17.10.17) காலை 8மணியளவில் நடைபெற்றது. இம்முகாம் மஜக நகர செயலாளர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் Dr. சோனை முத்து மற்றும் சித்த மருத்துவ அலுவலர் Dr. ராஹீமா பானு ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். மேலும் காவல் ஆய்வாளர் நஸீர், துணை ஆய்வாளர் சுல்தான் இப்ராஹீம், ARD தொண்டு நிறுவன பணியாளர்கள் செல்வ ராணி மற்றும் ஏஞ்சல் மேரி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தொண்டி_நகரம்
சிறைவாசியை சந்தித்து மஜக நிர்வாகிகள் நலம் விசாரிப்பு!
நெல்லை.அக்.17., நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பஷீர் என்ற சகோதரர் பெங்களூரு சிறையில் விசாரனை கைதியாக பல ஆண்டுகளா உள்ளார். அவர் நேற்று முன்தினம் மூன்று நாள் பரோலில் குடும்பத்தாரை கான பலத்த காவலுடன் மேலப்பாளையம் வந்திருந்தார். அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இச்சந்திப்பு தலைமை செயற்குழு உருப்பினர் அ.அப்துல் வாஹித் தலைமையில் மாவட்ட செயளாலர் A.கலீல் ரஹ்மான், பொருளாலர் S.சேக் இப்ராஹிம், மாணவர் இந்தியா மாவட்ட செயளாலர் யூ.வாசிம் முபாரக் மற்றும் காஜா மைதீன் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மாவட்டம்
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது…! மஜக வேண்டுகோள்…!!
(மஜக பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA வெளியிடும் அறிக்கை) "நிதி ஆயோக்" பரிந்துரை எனும் பெயரில் மத்திய அரசு எடுத்து வரும் பல முடிவுகள் நாட்டை சீர்குலைக்கும் வகையிலே இருக்கின்றன. இப்போது அங்கன்வாடி மையங்களை குறிவைத்திருகிறார்கள். அங்கன்வாடி மையங்களில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்களில் உடனுக்குடன் சமைத்து சுவையான, சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த திட்டத்திற்கு மூடு விழா நடத்திட மத்திய அரசு திட்மிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு நபருக்கு இதற்கு ஆகும் மாதாந்திர தொகையான 180 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவது என இதற்கு விளக்கமளித்துள்ளனர். மொத்தமாக ஒரு பொருளை தயாரிக்கும்போது ஆகும் செலவும், தனித்தனியாக தயாரிக்கும்போது ஆகும் செலவும் வெவ்வேறு அளவு கோலானது என்ற அடிப்படை அறிவு, நிதி வல்லுனர்களுக்கு தெரியாமல் போனதா? என்று தெரியவில்லை. 180 ரூபாயில் 1 வாரத்திற்கு கூட ஊட்டச்சத்துக்களை வாங்கிக் கொடுக்க முடியாது. மேலும், இத்தொகையை பெற்றோர்கள் குழந்தைகளுக்குதான் செலவழிப்பார்கள் என்பதற்கும் உத்திரவாதம் இல்லை. ஊட்டத்சத்து குறைவால், குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து விடக் கூடாது என்பதும், அது எதிர்கால இந்தியாவை பாதித்து விடக் கூடாது என்பதும் தான்