You are here

எனது நண்பருக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன்… திருவெறும்பூரில் மகேஷ் பொய்யாமொழிக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பரப்புரை!


மார்ச்.30,

திருச்சி – திருவெறும்பூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உதயசூரியனில் வாக்கு கேட்டு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பரப்புரை செய்தார்.

அப்போது பேசிய மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எனது சகோதரர், எனது தோழன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் எனக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறார் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பிறகு பொதுச் செயலளார் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதன் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

எனது நண்பர் மகேஷ் பொய்யாமொழியும் நானும் சட்டசபையில் முதல் வரிசையில் இருந்தவர்கள். சபையில் நாகரிகமாகவும், அதிமுகவினரும் பாராட்டும் வகையில் பேசக் கூடியவர்.

எல்லோருடனும் எளிமையாகவும், நட்பாகவும் பழகும் பண்பாளர்.

அவர் தாத்தா அன்பில் தர்மலிங்கம், தந்தை அன்பில் பொய்யாமொழி வழியில் 3 தலைமுறைகளாக திமுக வில் பணியாற்றி தமிழகத்தில் அரசியல் களமாடுகிறார்கள்.

கலைஞரால் பாராட்டப் பெற்று அண்ணன் தளபதி அவர்களால் சட்டமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டவர். திமுக வின் நம்பிக்கைகுரிய அடுத்த தலைமுறை இளைஞர்.

அந்த வகையில் எனது நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்கு உதய சூரியனில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். நல்ல பண்பாளரான அவருக்கு மீண்டும் வாய்ப்பளியுங்கள்.

இறை அருளால் அவர் வெற்றி பெற்று விட்டார். வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்பது தான் காணவேண்டியுள்ளது. அது ஒரு லட்சம் என இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசி
னார்.

இதில், மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், திருச்சி மாவட்ட செயலாளர் பேரா.மைதீன் அப்துல் காதர் தலைமையில் பொருளாளர் அந்தோணிராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, தர்கா பாரூக், ஷேக் அப்துல்லா, முஹம்மது பீர்ஷா மற்றும் அப்பகுதியை சேர்ந்த மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #TNElection2021
#திருச்சி_மாவட்டம்.

Top