தொண்டி.அக்.18., மனிதநேய ஜனநாயக கட்சி(மஜக) தொண்டி பேரூர் கிளை சார்பாக பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நேற்று (17.10.17) காலை 8மணியளவில் நடைபெற்றது.
இம்முகாம் மஜக நகர செயலாளர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் Dr. சோனை முத்து மற்றும் சித்த மருத்துவ அலுவலர் Dr. ராஹீமா பானு ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
மேலும் காவல் ஆய்வாளர் நஸீர், துணை ஆய்வாளர் சுல்தான் இப்ராஹீம், ARD தொண்டு நிறுவன பணியாளர்கள் செல்வ ராணி மற்றும் ஏஞ்சல் மேரி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தொண்டி_நகரம்