வேலூர்.அக்.25., தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், காய்ச்சலை கட்டுப்படுத்தவும், காய்ச்சல் பாதித்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது, அதன் ஒரு பகுதியாக இன்று வேலூர் மாநகரம் 49 வது வார்டு K.K.நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி தலைமையில் நடைப்பெற்றது. இம்முகாம் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் ஜாபர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் MBA கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். இதில் மஜக முன்னால் மாநகர செயலாளர் தாஜுதீன் அஸ்கர், முன்னால் இளைஞரணி துணை செயலாளர் சுல்தான், 49 வது வார்டு கிளை செயலாளர் ஹைதர் அலி, 53 வது வார்டு கிளை செயலாளர் ஜியாவுத்தின் கலீம், துணை செயலாளர் கவுஸ் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என சுமார் 300க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 25.10.2017
தமிழகம்
தமிழகம்
திருமாவளவன் மீது வரம்பு மீறிய விமர்சனத்திற்கு மஜக கண்டனம்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பாஜகவுக்கு எதிராக அரசியல் ரீதியான விமர்சனங்களை முன் வைத்ததற்கு உரிய வகையில் பதில் அளிக்காமல், அவரை கட்டப்பஞ்சாயத்துக்கார் என பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறியிருப்பதும், பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா அவர்கள், விடுதலை சிறுத்தைகளை அரசியல் களத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறியிருப்பதும் வண்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் விமர்சனங்களுக்கு, அரசியல் ரீதியாக பதில் அளிப்பதுதான் நாகரீகமாகும். அதுவே விவேகமான அரசியலும் கூட, தமிழிசை அவர்கள் மீது சிலர் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சனங்களை முன் வைப்பதை நாங்கள் ஏற்பதில்லை. அதுபோலதான், தொல்.திருமாவளவன் அவர்களை தரம் தாழ்ந்து அவர்கள் விமர்சிருத்திருப்பதையும் ஏற்க முடியாது. அயோத்தி தாசர் பண்டிதர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் ஆகியோரின் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் பணியாற்றி வருகிறார். தலித் வட்டத்தை தாண்டி தமிழர் தேசியம், தமிழ் மொழி பண்பாடு, திராவிட இயக்க நலன், சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு ஆகிய களங்களில் அவர் ஆற்றி வரும் பணிகள் அனைவராலும் வரவேற்கப்படுகிறது. அவர் ஃபாஸிஸத்தை வழிநடத்தவில்லை, இன அழிப்பை அங்கீகரிப்பதில்லை, ஒற்றைக் கலாச்சார திணிப்பை ஏற்பதில்லை,
நெல்லையில் மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்திப்புகள்!
நெல்லை.அக்.24., திருநெல்வேலி (கிழக்கு) மாவட்டம் மேலப்பாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA-வுடன், தலைமை ஓருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஜமாத்துல் உலமா தலைவர்களை சந்தித்தப்பிறகு, மவ்லவி J.S ரிபாயி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து உரையாடினர். மரியாதை நிமித்தமான இச்சந்திப்பிற்கு பிறகு மவ்லவி சம்சுல் லுஹா ரஹ்மானி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்து உரையாடினர். பிறகு மேலப்பாளையத்தை பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றின் சார்பில் அப்பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து மனு ஒன்றை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பிறகு நெல்லையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிறப்பாக தொண்டாற்றி வரும் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு ட்ரஸ்டிகளாக சேவையாற்றும் சகோ.பாளை ரபீக், சகோ.இனாயத்துல்லாஹ் ஆகியோரை சந்தித்து அங்கு நடைபெற்று வரும் சேவைகளை கேட்டறிந்து பாராட்டினார். இதற்கு விரைவில் அரசு சார்பிலான காப்பீட்டு திட்டங்கள் கிடைக்க, அரசிடம் பேசுவதாகவும் உறுதியளித்தார். அப்போது பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலகள், பொதுச்செயலாளரை
நாகை தீயணைப்பு நிலையம்-அரசு போக்குவரத்து பணிமனை ஆகியவற்றை பார்வையிட்டார் நாகை MLA!
நாகை.அக்.24., நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள பழைய தீயணைப்பு நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பார்வையிட்டு அங்குள்ள ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட, கடந்த கூட்டத் தொடரின் போது முதல்வரிடம் கடிதம் கொடுத்திருப்பதாகவும், இது குறித்து மீண்டும் நினைவுட்டுவதாகவும் கூறினார். மேலும் அங்குள்ள ஊழியர்களின் தேவைகளையும் கேட்டறிந்து குறித்துக் கொண்டார். பிறகு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்கு சென்று டிரைவர்கள், நடத்துனர்கள் தங்குமிடத்தை பார்வையிட்டு அங்குள்ள ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள பழைய கட்டிடம் விரைவில் பழுதுபார்க்கப்படும் என்றும் கூறினார். பிறகு பணிமனையின் பல்வேறு இடங்களையும் பார்வையிட்டு, அவற்றின் தேவைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, பல்லாவரம் ஷஃபி, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், IT WING மாவட்ட செயலாளர் சுல்தான், தொகுதி செயலாளர் தமீஜூதீன், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் அஜீஸ் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: நாகை சட்டமன்ற
ஜமாத்துல் உலமா தலைவர்களுடன் மஜக தலைவர்கள் சந்திப்பு!
நெல்லை.அக்.24., திருநெல்வேலி (கிழக்கு) மாவட்டத்தில் மஜக தலைவர்கள் ஒரு நாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தினர். மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர்.ராவுத்தர்ஷா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். ஜமாத்துல் உலமாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காஜா முயினுதீன் பாகவி இல்லத்திற்கு சென்றனர். அங்கு ஜமாத்துல் உலமாவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அங்கு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு, பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் புதிய தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பிறகு நடைபெற்ற கலந்துரையாடலில் ஜமாத்துல் உலமாவின் ஆதரவும், ஆலோசனைகளும் மஜகவுக்கு எப்பொழுதும் தேவை என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இச்சந்திப்பின் போது நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_கிழக்கு_மாவட்டம்