நாகை தீயணைப்பு நிலையம்-அரசு போக்குவரத்து பணிமனை ஆகியவற்றை பார்வையிட்டார் நாகை MLA!

image

image

image

நாகை.அக்.24., நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள பழைய தீயணைப்பு நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பார்வையிட்டு அங்குள்ள ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அங்குள்ள பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட, கடந்த கூட்டத் தொடரின் போது முதல்வரிடம் கடிதம் கொடுத்திருப்பதாகவும், இது குறித்து மீண்டும் நினைவுட்டுவதாகவும் கூறினார். மேலும் அங்குள்ள ஊழியர்களின் தேவைகளையும் கேட்டறிந்து குறித்துக் கொண்டார்.

பிறகு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்கு சென்று டிரைவர்கள், நடத்துனர்கள் தங்குமிடத்தை பார்வையிட்டு அங்குள்ள ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அங்குள்ள பழைய கட்டிடம் விரைவில் பழுதுபார்க்கப்படும் என்றும் கூறினார். பிறகு பணிமனையின் பல்வேறு இடங்களையும் பார்வையிட்டு, அவற்றின் தேவைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, பல்லாவரம் ஷஃபி, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், IT WING மாவட்ட செயலாளர் சுல்தான், தொகுதி செயலாளர் தமீஜூதீன், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் அஜீஸ் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
24.10.17