நெல்லை.அக்.24., திருநெல்வேலி (கிழக்கு) மாவட்டத்தில் மஜக தலைவர்கள் ஒரு நாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தினர். மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர்.ராவுத்தர்ஷா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
ஜமாத்துல் உலமாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காஜா முயினுதீன் பாகவி இல்லத்திற்கு சென்றனர். அங்கு ஜமாத்துல் உலமாவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அங்கு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு, பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் புதிய தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பிறகு நடைபெற்ற கலந்துரையாடலில் ஜமாத்துல் உலமாவின் ஆதரவும், ஆலோசனைகளும் மஜகவுக்கு எப்பொழுதும் தேவை என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இச்சந்திப்பின் போது நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_கிழக்கு_மாவட்டம்