சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்ற மஜக வின் முப்பெரும் விழா!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்டம் சார்பில் கூட்ட அரங்கம், விருந்தினர் மாளிகை திறப்பு விழா, மற்றும் திரளானோர் மஜக வில் இணையும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சாதிக்பாஷா, அவர்கள் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை செயலாளர் அஸ்லம் கான் வரவேற்புரை யாற்றினார்.

மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மல் உசேன், சேட்டு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்சா, அவர்கள் கலந்து கொண்டு கூட்ட அரங்கு, மற்றும் விருந்தினர் மாளிகையை திறந்து வைத்தார்.

முன்னதாக மாநில துணை செயலாளர் முன்னிலையில் திரளானோர் தங்களை மஜக வில் இணைத்துக்கொண்டனர்.

இதில் Ajs.தாஜ்தீன், அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட பொருளாளர் அப்ரார் பாஷா, நன்றியுரை நிகழ்த்தினார்.