செங்கை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகீர் அவர்கள் தலைமையில் இன்று தலைமையகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபீ அவர்கள் பங்கேற்று மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

அவருடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாம்பரம் தாரிக் உடனிருந்தார்.

பின்னர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த இளைஞர்கள் கட்சியில் புதிதாக இணைந்தனர்.

இதில் பாலவாக்கம் காதர், மாவட்ட துணைச்செயலாளர்கள் ECR அப்துல் சமது, கண்டோன்ட்மண்ட் அப்துல் சமது, இளைஞரணி செயலாளர் பைசுல்லாஹ், IKP செயலாளர் நாகூர் கணி, இளைஞரணி பொருளாளர் ஜாகிர் உசேன், MJTS செயலாளர் பிராங்கிளின், இளைஞரணி துணை செயலாளர் ஷேக் மீரான், பல்லாவரம் நகர செயலாளர் ஷானவாஸ், கண்டோண்ட்மன்ட் நகர செயலாளர் தமீனா, சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் தமிமுன் அன்சாரி, மற்றும் அப்துல் ரஷீத், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.