நெல்லை.அக்.24., திருநெல்வேலி (கிழக்கு) மாவட்டம் மேலப்பாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA-வுடன், தலைமை ஓருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
ஜமாத்துல் உலமா தலைவர்களை சந்தித்தப்பிறகு, மவ்லவி J.S ரிபாயி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து உரையாடினர். மரியாதை நிமித்தமான இச்சந்திப்பிற்கு பிறகு மவ்லவி சம்சுல் லுஹா ரஹ்மானி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்து உரையாடினர்.
பிறகு மேலப்பாளையத்தை பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றின் சார்பில் அப்பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து மனு ஒன்றை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
பிறகு நெல்லையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிறப்பாக தொண்டாற்றி வரும் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு ட்ரஸ்டிகளாக சேவையாற்றும் சகோ.பாளை ரபீக், சகோ.இனாயத்துல்லாஹ் ஆகியோரை சந்தித்து அங்கு நடைபெற்று வரும் சேவைகளை கேட்டறிந்து பாராட்டினார். இதற்கு விரைவில் அரசு சார்பிலான காப்பீட்டு திட்டங்கள் கிடைக்க, அரசிடம் பேசுவதாகவும் உறுதியளித்தார்.
அப்போது பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலகள், பொதுச்செயலாளரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிந்தனர்.
மேலப்பாளையத்தில் மஜகவை வலிமைப்படுத்தும் பணிகள் குறித்து, மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசித்துவிட்டு அங்கிருந்து மஜக தலைவர்கள் புறப்பட்டனர்.
இச்சந்திப்பின் போது மாநில துணைச் செயலாளர் தோப்புதுறை ஷேக் அப்துல்லா, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை அப்துல் வாஹித் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாவட்டம்.