வேலூர் மாநகரம் K.K.நகரில் மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!

image

image

image

வேலூர்.அக்.25., தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், காய்ச்சலை கட்டுப்படுத்தவும், காய்ச்சல் பாதித்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது,

அதன் ஒரு பகுதியாக இன்று வேலூர் மாநகரம் 49 வது வார்டு K.K.நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி தலைமையில் நடைப்பெற்றது.

இம்முகாம் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் ஜாபர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் MBA கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

இதில் மஜக முன்னால் மாநகர செயலாளர் தாஜுதீன் அஸ்கர், முன்னால் இளைஞரணி துணை செயலாளர் சுல்தான், 49 வது வார்டு கிளை செயலாளர் ஹைதர் அலி, 53 வது வார்டு கிளை செயலாளர் ஜியாவுத்தின் கலீம், துணை செயலாளர் கவுஸ் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என சுமார் 300க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
25.10.2017