You are here

விலைவாசி உயர்வை கண்டித்து பண்டாரவாடையில் மஜக ஆர்ப்பாட்டம்!

‌ஜூலை.18, இன்று பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாத ஒன்றிய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி பாபநாசம் ஒன்றியம் சார்பில் பண்டாரவாடையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளர் முஹம்மது மஃரூப், ராஜகிரி ஊராட்சிமன்ற தலைவர் முபாரக் ஹூசைன், ராஜகிரி பண்டாரவாடை வணிகர் சங்க தலைவர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

இதில் முக கவசங்களுடன் ராஜகிரி – பண்டாரவாடை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மஜக ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.

Top